திமுக பாணியில் செயல் தலைவர் பதவியை உருவாக்குகிறதா தேமுதிக?.. இனி விஜயகாந்த் இடத்தில் பிரேமலதா?
சென்னை: தேமுதிகவில் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் செயல்தலைவர் பதவியை உருவாக்க விரைவில் பொதுக் குழு கூட்டம் கூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜயகாந்த் ரசிகர்களாக இருந்தவர்கள்தான் அவரது கட்சி தொண்டர்களாகினர் என்பது அனைவரும் அறிந்ததே. விஜயகாந்த் ஆக்ட்டிவ்வாக இருந்தவரை கட்சியில் பிசிறு தட்டாமல் பார்த்துக் கொண்டார். தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
ஆனால் எப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதோ அன்று முதல் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. தேர்தலில் தொடர் தோல்வி, வாக்கு சதவீதமும் குறைந்துவிட்டது. கட்சியிலிலிருந்து முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைகிறார்கள்.

நிர்வாகிகள்
எனவே கட்சியில் நிர்வாகிகள் கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என நிர்வாகிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு பிரேமலதா உள்ளிட்ட விஜயகாந்த் குடும்பத்தினர் பிடி கொடுக்காமல் இருந்து வந்தனர்.

கோரிக்கை
தற்போது மீண்டும் அதுகுறித்த கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது இன்னும் இரு ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலும் 4 ஆண்டுகளில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தேமுதிக சோபிக்க வேண்டுமானால் தலைமை அளவில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனராம்.

வெற்றி
வரும் தேர்தல்களில் கட்சி நல்லதொரு வெற்றியை பெற்றால் அது விஜயகாந்திற்கு எத்தனை மகிழ்ச்சியை தரும் என யோசித்த பிரேமலதா நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினாராம். அவர்களும் தலைமை நிர்வாகம் அளவில் மாற்றத்தை கொண்டு வரலாம் என்றனராம்.

கட்சி முடக்கம்
விஜயகாந்தால் செயல்பட முடியவில்லை, இதனால் கட்சியும் முடங்கிவிட்டதால் அதிருப்தியில் உள்ள தொண்டர்கள் வேறு கட்சிக்கு தாவாத வண்ணம் இழுத்து பிடிக்கவாவது இதை செய்ய வேண்டும் என நிர்வாகிகள் தெரிவித்தனராம். இதனால் வெகு விரைவில் தேமுதிக பொதுக் குழு கூட்டம் கூட்டப்படும் என தெரிகிறது.

செயல்தலைவர்
அவ்வாறு கூட்டப்படும் பட்சத்தில் செயல் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும் என தெரிகிறது. அது போல் விஜய பிரபாகரனுக்கும் ஏதேனும் முக்கிய பதவிகள் கொடுக்கப்படலாம் என தெரிகிறது. அதாவது திமுக பாணியில் செயல் தலைவர் பதவி உருவாக்கப்படவுள்ளதாம்.

திமுக பாணியில் தேமுதிக
மறைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரால் கட்சி பணிகளை கவனித்து கொள்ள முடியாமல் போனதால் மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் பதவியை ஏற்றார். அவர் கட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தார். அந்த வகையில் பிரேமலதா செயல்தலைவர் ஆனால் விஜயகாந்த் மேற்கொள்ள வேண்டிய கட்சி பணிகளை அவர் மேற்கொள்வார் என தெரிகிறது. ஆனால் விஜயகாந்த் எப்படியும் கட்சியை நடத்த மீண்டும் வருவார் என தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த செயல்தலைவர் பதவி பேச்சு அடிபட்டதால் மனம் கலங்கியுள்ளனராம். விஜயகாந்த் தலைமைக்கு கட்டுப்பட்டோம், ஆனால் தற்போது தலைமை பொறுப்பை பிரேமலதா வகிக்க உள்ளாரே என கலக்கத்தில் உள்ளனராம். ஏற்கெனவே ஆகஸ்ட் 15 ஆம் தேதியும் ஆகஸ்ட் 25 ஆம் தேதியும் விஜயகாந்தின் உடல்நிலையை கண்டு தொண்டர்கள் மனம் நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications