அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. கடைசி வரை வீரமாகப் போராடியுள்ளோம்.. அதான் முக்கியம்! சொல்வது பிரேமலதா!
சென்னை: அரசியலில் வெற்றி தோல்வி சகஜம், கடைசி வரை வீரமாகப் போராடி, தேர்தல் களத்தில், ஒரு சரித்திரத்தை படைத்து இருக்கிறோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டனர். இந்த நான்கு முனை போட்டியில் திமுக ஒட்டுமொத்தமாக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர் கொண்டது. இதில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. 5 தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். விருதுநகர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரன் போட்டியிட்டார். விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
விருதுநகர் தொகுதி சிட்டிங் எம்பியான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டியை கொடுத்து வந்தார் விஜய பிரபாகரன். இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இறுதியில் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தமிழ்நாட்டிலேயே மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் விஜய பிரபாகரன்.
அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும், நாம் தமிழர் கட்சியும் தாங்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணிக்காக உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முதற்கண் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவில், பல்வேறு கட்டமான சவால்களை எதிர்த்து, ஒரு கோடிக்கு மேல் வாக்குகளை பெற்று அசைக்க முடியாத ஒரு சக்தியாக, இந்த கூட்டணியை மாற்றிய அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வாக்களித்த பொதுமக்கள் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேமுதிக போட்டியிட்ட 5 தொகுதிகளிலுமே வாக்களித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கு தேமுதிகவின் பொதுச் செயலாளராக நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்! கடைசி வரை வீரமாகப் போராடி, தேர்தல் களத்தில், ஒரு சரித்திரத்தை படைக்கும் அளவில் நாம் போட்டியிட்டு இருக்கிறோம். அனைத்து வேட்பாளர்களும் இந்த தோல்வியை படிக்கல்லாக மாற்றி வெற்றிக்கனியை பறிக்க கடுமையாக உழைத்து, 2026 நமது இலக்காக இப்பொழுதிலிருந்தே உழைத்து பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.
இந்த தேர்தலில் வாக்களித்த பொது மக்களுக்கும் இந்த கூட்டணிக்காக, உழைத்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்பகுதி திராவிட கழகத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் அனைத்து முன்னாள் அமைச்சர் பெருமக்களுக்கும், உறுப்பினர்கள் மற்றும் இந்த கூட்டணிக்காக உழைத்த அனைவருக்குமே தேமுதிக சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாளை நமதே! அரசியலில் வெற்றியும் தோல்வியும் அனைவருக்கும் சகஜமான ஒன்று என்பதை ஏற்றுக்கொண்டு மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து அடுத்த வெற்றிக்காக நாம் தயாராவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications