மகாகவி பாரதி பெயரில்.. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை.. பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு
சென்னை: மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் தொடர்பான ஆராய்வுகளை மேற்கொள்ளப் பாரதியாரின் பெயரில் இருக்கை உருவாக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Recommended Video
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், பாரதியாரின் நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு தமிழ் தொடர்பான ஆராய்வுகளை மேற்கொள்ள ஏதுவாக மகாகவி பாரதியாரின் பெயரில் இருக்கை ஒன்று ஏற்படுத்தும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகக் காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பின் மூலம் இனி வட இந்தியாவிலும் தமிழ் தொடர்பான ஆய்வுகளை நடத்த முடியும்.
முன்னதாக மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இந்த ஆண்டு முதல் மகாகவி நாளாக அனுசரிக்கப்படும் என நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை , காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications