புதியவர்களுக்கே அரசு பணியில் முன்னுரிமை.. அரசு ஊழியர்கள் கவனிக்க வேண்டிய பெரிய மாற்றம்
சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.இதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அத்தகைய முன்னுரிமையை பெற விண்ணப்பிக்க முடியும்.
தமிழ் வழிக்கல்வி அரசாணை விவரம்:
2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அதன் 2020 ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின்படி, 1 ஆம் வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.

இதன்மூலம், பிற மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு படித்து, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இந்த 20% முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற மாட்டார்கள்.
யாரெல்லாம் முன்னுரிமை பெற தகுதியுடையவர்கள்?
புதிய அரசாணையின்படி, பின்வரும் நபர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை பெற தகுதியுடையவர்கள்:
1 ஆம் வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்கள்.
ஒன்றாம் வகுப்பில் சேராமல், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வயதின் அடிப்படையில் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு படித்து தேர்ச்சி பெற்றவர்கள்.
பிற மாநிலங்களில் தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு படித்து, பின்னர் தமிழ்நாட்டில் தாங்கள் சேரும் வகுப்பில் இருந்து தொடர்ந்து தமிழ் வழியில் படித்தவர்கள்.
பள்ளிக்குச் சென்று 10, 11, 12-ம் வகுப்பு தேர்வெழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வாக தேர்வு எழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள்.
சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்:
முன்னுரிமை கோரும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை படித்த அனைத்து கல்வி நிலையங்களில் இருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் பெற வேண்டும்.
1. பள்ளிக் கல்விக்கு: தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழங்கும் சான்றிதழ்.
2. உயர் கல்விக்கு: தொழிற்பயிற்சி நிலையம், கல்லூரி, பல்கலைக்கழக முதல்வர் அல்லது பதிவாளர் வழங்கும் சான்றிதழ்.
இந்த சான்றிதழ்கள் தற்போது பணியில் உள்ள அதிகாரிகளால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற அலுவலர்கள் வழங்கும் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது .
நீதிமன்ற தீர்ப்பு என்ன:
ஒருவர் பட்டப்படிப்பு தகுதியுள்ள ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறார் என்றால், அவர் தனது கல்வியின் அனைத்து நிலைகளையும் தமிழ் வழியில் முடித்திருக்க வேண்டும்.
ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை.
12-ஆம் வகுப்பு (மேல்நிலைக்கல்வி).
பட்டப்படிப்பு . இந்த மூன்றையுமே தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அவர் PSTM இடஒதுக்கீட்டிற்குத் தகுதியானவர். இடையில் ஒரு வருடம் அல்லது ஒரு கட்டம் (உதாரணமாக 12-ஆம் வகுப்பு மட்டும்) ஆங்கில வழியில் படித்திருந்தாலும் அவர் தகுதியற்றவர் ஆகிறார்.
தேர்வு மட்டும் தமிழில் எழுதினால் போதாது
பலர் ஆங்கில வழியில் படித்துவிட்டு, பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதுவார்கள். இதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. நீங்கள் பயின்ற பயிற்சி மொழி கண்டிப்பாகத் தமிழாக இருந்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை அந்தந்தக் கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டும்.
போலிச் சான்றிதழ்கள் மீதான எச்சரிக்கை
கடந்த காலங்களில், ஆங்கில வழியில் படித்துவிட்டுப் பின்னாளில் "தமிழ் வழியில் படித்ததாக" சான்றிதழ் வாங்கிய பல புகார்கள் வந்தன.இதனை டிஎன்பிஎஸ்சி மற்றும் இதர அரசு நிறுவனங்கள் சான்றிதழ்களைக் கூர்மையாக ஆய்வு செய்ய வேண்டும்.
தவறான சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் பணியில் இருந்தாலும் நீக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளுக்கு முன்னுரிமை அல்ல
இந்த இடஒதுக்கீடு என்பது தமிழ் வழியில் படித்தவர்களுக்கானது. அது அரசுப் பள்ளியாக இருந்தாலும் சரி, தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி, தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தால் அவர்கள் இந்த 20% இடஒதுக்கீட்டைப் பெறலாம்" என்று கூறியது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு அரசு "தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில்" திருத்தம் கொண்டு வந்தது. அதன்படியே நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.இதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அத்தகைய முன்னுரிமையை பெற விண்ணப்பிக்க முடியும்.
தமிழக சட்டசபையில் சட்ட மசோதா ஒன்றை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- "தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் நேரடி பணிநியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப்பணியிடங்களிலும் 20 சதவீதம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, ஒரு விண்ணப்பதாரர் ஏற்கனவே அரசுப்பணியில் இருக்கிறாரா? இல்லையா? என்பதை பொருட்படுத்தாமல், இதுவரை அனைத்து நேரடி பணி நியமனங்களிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமையை அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில், நேரடி பணி நியமனம் என்ற சொல்லுக்கான வரம்புக்கு சட்டப்பொருள் விளக்கத்தை சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ளது. அதில், ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் முன்னுரிமை நியமனத்திற்கு தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது
7.9.2010 அன்றைய தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் தற்போதுவரை தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கான முன்னுரிமையின் அடிப்படையில் நடைபெற்ற பணி நியமனங்களை இந்த மசோதா செல்லுபடியாக்குகிறது. இனி வரும் காலங்களில் புதிதாக பணியில் சேருபவர்களுக்கு மட்டுமே தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கப்படும். இந்த சட்ட மசோதா அமலுக்கு வரும் தேதிக்கு முன்பு அறிவிக்கை செய்யப்பட்ட முன்னுரிமை காலிப்பணியிடங்களுக்கு இந்த புதிய சட்டம் பொருந்தாது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று சட்டசபையில் இந்த மசோதா ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்புக்கு பின்பு நிறைவேற்றப்படும்.
இது பற்றி நெட்டிசன் ஒருவர் கூறுகையில், குரூப் 4 ல ஒருத்தர் பிஎஸ்டிஎம் கோட்டாவில் அரசு வேலை வாங்கி வேலை பாத்துகிட்டு இருக்காங்க இப்போ அவரே குரூப் 2 ல பிஎஸ்டிஎம் கோட்டா வா க்ளைம் பண்ண முடியது. அரசு வேலை இல்லமா இருக்கு ஒரு கேண்டிடேட்டுக்கு இந்த பிஎஸ்டிஎம் கோட்டா வா வாங்கி வேலை வாங்கலாம். நீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு & தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications