சென்னை உட்பட.. தமிழகத்தில் அனைத்து வகை தனியார் நிறுவனங்களும் இயங்கலாம்.. தமிழக அரசு அனுமதி
சென்னை: சென்னையில் அனைத்து வகை தனியார் நிறுவனங்களும் இயங்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் அனைத்து வகை நிறுவனங்களையும் திறப்பது தொடர்பாக தமிழக அரசு இன்று ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதை பாருங்கள்:
தமிழகத்தில் நோய்த்தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.

அமைச்சரவை
கடந்த 2ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும் பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வழிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர இந்த பணிகள் மே 11ஆம் தேதி திங்கள்கிழமை முதல் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

33 சதவீத பணியாளர்
பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன், காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.

முன்னெச்சரிக்கை
அரசு அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்துவது, பணிபுரியும் பணியாளர்கள் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழி முறைகளை தீவிரமாக கடைபிடிப்பதையும் கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையாளர், காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆதரவு
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும். அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications