சொதப்பிய மத்திய அரசு.. களத்தில் இறங்கிய தனியார்! கிளாம்பாக்கத்தில் நடந்த திடீர் மாற்றம்.. என்னாச்சு?
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரத்தில் மத்திய ரயில்வே துறை சில சொதப்பல்களை செய்துள்ள நிலையில், இங்கே தனியார் பேருந்து நிறுவனங்கள் முக்கியமான சில மாற்றங்களை செய்ய உள்ளன.
ரயில்நிலையம்: புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே கிளாம்பாக்கத்தில் வரவிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் மோசமான திட்டமிடலுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய ரயில்வே மீண்டும் குழப்பமடைந்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
ரயில் நிலையம் தமிழ்நாடு அரசின் செலவில் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ. 100 கோடி ரூபாயில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.
ஆனால் குழப்பம்: புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே கிளாம்பாக்கத்தில் வரவிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் மோசமான திட்டமிடலுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய ரயில்வே மீண்டும் குழப்பமடைந்துள்ளது.
மூன்று நடைமேடைகளும் 300 மீட்டர் நீளம் மட்டுமே இருக்கும் என்பதால் கட்டப்படும் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் மட்டுமே நிற்க முடியும், அதே நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் போன்ற ரயில்கள் 380 மீட்டர் நீள நடைமேடை தேவைப்படுவதால் அங்கு நிற்க முடியாது.
இதனால் வெளிமாநில, வெளிமாவட்ட ரயில்கள் அங்கே நிற்காது. தாம்பரத்தில் இறங்கியே மாற வேண்டும். சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் ரயில் நிலையம் இந்த வருட இறுதியில் பயன்பாட்டிற்கு வரும். அதற்கு இடையில் ரயில் நிலையம் பேருந்து நிலையம் இடையிலான பறக்கும் நடை பாலமும் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் இறங்கிவிட்டனர்: இப்படிப்பட்ட நிலையில்தான் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையிலும், நகரச் சாலைகளில் ஆம்னி பேருந்துகள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் வர உள்ளதை முன்னிட்டும் ஷட்டில் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன .
வடபழனி, வேளச்சேரி, பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் உட்பட நகரம் முழுவதும் உள்ள பல முக்கிய இடங்களிலிருந்து ஷட்டில் வேன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த முன்முயற்சியானது நகருக்கு வெளியே 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது பயணிகளுக்கான கடைசி மைல் இணைப்பை எளிதாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கத்தில் வாகன நிறுத்துமிடம் தயாரானதும், அனைத்து ஆம்னி பேருந்துகளும் நகர சாலைகளுக்குள் நுழைய தடை விதிக்கப்படும்.
கிளாம்பாக்கத்தை நகரின் மையங்களுக்கு இணைக்க போதுமான MTC பேருந்துகள் இருப்பதாக அரசாங்கம் கூறினாலும் அவை போதுமானதாக இல்லை என்பதால் தனியார் நிறுவனங்கள் வடபழனி, வேளச்சேரி, பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் உட்பட நகரம் முழுவதும் உள்ள பல முக்கிய இடங்களிலிருந்து ஷட்டில் வேன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications