சென்னை மாநகராட்சியில் உங்கள் வீடு இருக்கா.. வெள்ளிக்கிழமை அரசு கொண்டு வந்த சட்ட மசோதா தெரியுமா?
சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர்ப் பாதைக்கு 30 மீட்டர் சுற்றளவில் உள்ள தனியார் தெருக்கள், வளாகங்கள் கழிவுநீர் இணைப்பு பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை அன்று திருத்திய சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் என்னென்ன தண்டனைகள் தெரியுமா? இந்த பதிவில் பாருங்கள்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அன்று, நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சட்டத்தை திருத்தி தாக்கல் செய்த மசோதாவில் கூறியுள்ளதாவது:

"தனியார் வளாகம் அல்லது ஒரு தனியார் தெருவின்மிக அருகில் உள்ள இடத்திலிருந்து 30 மீட்டர் தூரத்துக்குள், வாரியத்தின் கழிவுநீர்ப் பாதை இருக்குமானால், அந்த வளாகத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்பவர், தனியார் தெருவின்உரிமையாளர், கழிவுநீரைவாரியத்தின் கழிவுநீர்ப்பாதையில் வெளியேற்றுவதற்காக இணைப்பு வழங்க அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் தண்டத் தொகை: அந்த விண்ணப்பம் பெறப்பட்டதன் பேரில், அந்தவளாக உரிமையாளர், குடியிருப்பவர் அல்லது தெருவின் உரிமையாளர், கழிவுநீர்இணைப்புக்கு வாரியத்துக்கு ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் கழிவுநீர் அகற்றுதலுக்கான பிற வழிமுறை எவற்றையும் தொடரக் கூடாது.
இதை மீறினால், 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் ஒரு கால அளவுக்கான சிறைத் தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தொடர்ந்துமீறினால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ.500 வரை நீட்டிக்கப்படும் கூடுதல் தண்டத் தொகை விதிக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் மேல்முறையீடு என்பது, உத்தரவு பெறப்பட்டு 30 நாட்களுக்குள் மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பப்பட வேண்டும். மேல் முறையீட்டாளர் உரிய கால அளவுக்குள் மேல் முறையீடு செய்யப்படாததற்கு போதிய காரணம் உள்ளது என்று மேலாண்மை இயக்குநர் கருதினால், 30 நாட்களுக்குப்பின் செய்யப்பட்ட மேல்முறையீட்டையும் ஏற்கலாம். இதற்கு 60 நாட்களுக்குள் தீர்வு அளிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்தில் கழிவுநீர் பாதைக்கு விண்ணப்பிப்பது எப்படி? சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பணிமனை அலுவலகங்களில் நேரிடையாகவும், தொலைபேசி எண்.(044-45674567) மற்றும் இணையதளம் (https://cmwssb.tn.gov.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் ஆவணங்கள் உரிமையாளரிடம் சரிபார்க்கப்பட்டு குடிநீர்/கழிவுநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது
தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய (G+1) மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) 1800 சதுர அடி வரை இணைப்புக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் (உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணங்கள் உள்பட) அனைத்து கட்டணங்களும் ஒரே தவணையாகவோ அல்லது 10 தவணைகளில் (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஐந்து ஆண்டுகளில்) செலுத்தலாம்.
தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய (G+2) மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) மற்றும் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய 3 மாடி கட்டிடங்கள் (Stilt +3) 2700 சதுர அடி வரை குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு இணைப்புக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் (உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் கட்டணங்கள் உள்பட) அனைத்து கட்டணங்களையும் ஒரே தவணையாகவோ அல்லது மூன்று தவணைகளில் (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, 18 மாதங்களில்) செலுத்தலாம்.
பிற வகையான கட்டிட உரிமையாளர்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறவிருக்கும் கட்டிடத்தின் கட்டுமானப் பணி நிறைவு பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பித்து கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பிற்கான முழு கட்டணத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications