போரூர் - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் சிக்கல்.. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அதிருப்தி?
சென்னை: பூந்தமல்லி - போரூர் இடையேயான பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்திய போது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.. அதேநேரம் கடந்த வாரம் போரூர் - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் பாதையை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒரு சில காரணங்களால் இந்தத் தடம் தற்போது பயணிகள் போக்குவரத்திற்குத் தயாராக இல்லை என்றார். எனவே அந்த பிரச்சனைகளை சரி செய்த பின்னரே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன
பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் பூந்தமல்லி முதல் போரூர் வரை எல்லா ரயில் நிலையங்களும் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் போரூர் முதல் வடபழனி இடையே உள்ள ஆலப்பாக்கம், சாலிகிராமம் ரயில் நிலையங்களில் பணிகள் இன்னும் முடியவில்லை. அந்த பணிகள் முடிந்த பின்னரே ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வர போகின்றன.

எனினும் ஆலப்பாக்கம், சாலிகிராமம் ரயில் நிலையங்களில் பணிகள் முடியாத போதிலும், போரூர் முதல் வடபழனி வரை நான் ஸ்டாப் ஆக செல்லும் வகையில் பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அதற்கு பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதல் அவசியம் ஆகும்.குறைபாடுகள் இருந்தால் அதனை சரி செய்த பின்னரே பயன்பாட்டிற்கு திறக்க முடியும்.
பிரச்சனை என்ன
எனவே ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அண்மையில் ஆய்வு நடத்தினார்.இதில் பூந்தமல்லி - போரூர் இடையேயான பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்திய போது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.. ஆனால் போரூர் முதல் வடபழனி வரையில் பகுதியில் பயணிகள் பாதுகாப்புத் தரங்களை எட்ட சில சிக்கல்கள் இருப்பதை பாதுகாப்பு ஆணையர் கண்டறிந்தாராம். அவற்றைச் சரிசெய்த பிறகுதான், இந்தத் தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என்கிறார்கள்.
பிப்ரவரி 25ம் தேதி இறுதி ஆய்வு
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அறிவுறுத்தல்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம். அவர் சுட்டிக்காட்டிய குறைகளைச் சரிசெய்யும் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டோம். பணிகள் முடிந்ததும், அதற்கான அறிக்கையைச் சமர்ப்பிப்போம். பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட ஆய்வு மற்றும் வேகச் சோதனைக்குப் பிறகு, இந்தத் தடத்திற்கான அனுமதி கிடைக்கும்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ திட்டம்
மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் முதல் பகுதியாக, பூந்தமல்லி முதல் போரூர் வரை இயக்க திட்டமிட்டது, ஆனால் முதற்கட்ட வழித்தட மெட்ரோ ஓடும் வடபழனியில் இணைப்பு ஏற்பத்தும் வகையில் பூந்தமல்லி முதல் வடபழனி வரை இந்த மாதமே ரயில்களை இயக்க சென்னை மெட்ரோ திட்டமிட்டது. இதில் பூந்தமல்லி - போரூர் இடையே அனைத்து நிலையங்களும் தயாராக உள்ள நிலையில், ஆலப்பாக்கம் முதல் சாலிகிராமம் வரையிலான மீதமுள்ள நிலையங்களை ஜூன் மாதத்திற்குள் செயல்பாட்டுக்குக் கொண்டு வர சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது.
ரயில்வே கண்டறிந்த சிக்கல்கள் என்ன
ஆலப்பாக்கம் மற்றும் சாலிகிராமம் இடையே 'இரட்டை அடுக்கு' வழித்தடத்தின் மேல் தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், அதன் கீழ் பகுதியில் ரயில்களை இயக்குவது குறித்து பாதுகாப்பு ஆணையர் கவலை தெரிவித்திருக்கிறார். அவசரகால வெளியேற்றம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.ரயில் பாதையின் நடுவே ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறால் ரயில் நின்றால், பயணிகளைப் பாதுகாப்பாக மீட்க போரூர் சந்திப்பு - வடபழனி இடையே அவசரகால வெளியேற்றப் படிக்கட்டுகள் அமைக்கப்பட வேண்டும். அத்துடன் அவசரகால நடைபாதையில் போதிய விளக்கு வசதிகள் செய்யப்பட வேண்டும்.
பணிகள் முடிய வேண்டும்
அத்துடன் ஆலப்பாக்கம் - ஆழ்வார்திருநகர் இடையே இரட்டை அடுக்கு வழித்தடத்தில் சில இடங்களில் தளப்பணிகள் இன்னும் முடிக்கப்பட வேண்டியுள்ளது. அதேபோல் மின்சாரக் கம்பங்களின் உறுதித்தன்மைக்காக அவற்றின் அடிப்பகுதியை பலப்படுத்தும் (Grouting) பணிகள் முடிக்கப்பட வேண்டும்.
நடுவழியில் நின்றால்
ஆலப்பாக்கம் பகுதியில் ரயில் நடுவழியில் நின்றால், பயணிகள் எவ்வாறு வடபழனி வரை தண்டவாளத்தில் நடந்து செல்ல முடியும் என்ற கேள்வி ஆய்வின் போது எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், ஆழ்வார்திருநகர் மற்றும் வளசரவாக்கம் ஆகிய இரண்டு இடங்களிலும் அவசரகால வெளியேற்றப் படிக்கட்டுகள் கட்டும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
அவசரகால படிக்கட்டுகள்
"ஆலப்பாக்கம் முதல் சாலிகிராமம் வரையிலான நிலையங்களில் பிளாட்பாரத்தில் இருந்து கான்கோர்ஸ் (Concourse) பகுதிக்குச் செல்ல அவசரகால படிக்கட்டுகள் உள்ளன. ஆனால், அங்கிருந்து சாலைக்குச் செல்ல கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட படிக்கட்டுகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தோம். இப்போது பாதுகாப்பு ஆணையரின் அறிவுறுத்தலின்படி, இந்த இரண்டு நிலையங்களிலும் பயணிகளுக்காக பிரத்யேக அவசரகால நடைபாதைகளை அமைத்து வருகிறோம்," என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்
அடுத்த வாரம் தெரியும்
தற்போது இரட்டை அடுக்கு வழித்தடத்தில் தளப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும், ரயில்கள் இயங்கும் நேரத்தில் ஆலப்பாக்கம் - சாலிகிராமம் இடையே கான்கிரீட் போடும் பணிகள் நடைபெறாது என்றும் இரவு நேரத்தில் மட்டுமே நடக்கும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இது குறித்த பாதுகாப்பு கையேடு இந்த வாரம் பாதுகாப்பு ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன்பிறகு அவர் இறுதி முடிவினை அறிவிப்பார். அவர் பச்சை கொடி காட்டினால் ரயில்கள் பூந்தமல்லி வடபழனி இடையே ஓடிவிடும்.. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே ரயில்கள் ஓடுமா அல்லது தாமதம் ஆகுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications