சொத்து பத்திரங்கள்.. டோக்கன் வாங்கியவர்கள் பத்திரப்பதிவுக்கு ஏன் வரல? பதிவுத்துறை செம கிடுக்கிப்பிடி
சென்னை: தமிழக பதிவுத்துறை, ஞாயிற்றுக்கிழமையன்று செயல்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், அதன்படி செயல்படாததால் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அத்துடன், சொத்து பத்திரங்களை பதிவு செய்ய, டோக்கன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் பதிவுக்கு வராதது குறித்து விசாரித்து பதில் அளிக்குமாறு, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், சுபமுகூர்த்த தினத்தில் ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் பத்திரப்பதிவு செய்ய முயலும்போது கூட்ட நெரிசல் ஏற்படும். இதனால், பத்திரப்பதிவு செய்ய முடியாமலும் போகும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, சுமார் 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் துறையாக பதிவுத்துறை விளங்கி வருகிறது.. கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.17,296 கோடியும், 2023-24-ம் ஆண்டில் ரூ.18,825 கோடியும் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான கணக்குப்படி ரூ.14,525 கோடியை எட்டிவிட்டது. வரும் மார்ச் மாதத்துக்குள் கடந்த ஆண்டு வருவாயை முறியடித்து சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுபமுகூர்த்தநாள்: அதுமட்டுமல்லாமல், பெரும்பாலான மக்கள், புதிதாக ஒரு வீடு, நிலம் வாங்கும்போதும், அதற்கான பத்திரப்பதிவு செய்யும்போதும் நல்ல நேரம், சுபமுகூர்த்த நாட்களை பார்ப்பது வழக்கமாகும்.
முக்கியமாக, சுபமுகூர்த்த தினத்துக்காக பத்திரப்பதிவு கூட செய்யாமல் எத்தனையோ பேர் காத்திருக்க செய்கிறார்கள். பத்திரப்பதிவு அலுவலகங்களில் முகூர்த்த நாட்களில் மக்கள் பத்திரங்களை பதிவு செய்ய அலைமோதுகின்றனர். சில நேரங்களில் முகூர்த்த நாட்கள் வார விடுமுறை நாட்களில் வந்து விடுவதால் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.
சிக்கல்கள்: இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே, குறிப்பிட்ட சுபமுகூர்த்த தினங்களில் கூடுதலாக பத்திரவுப்பதிவுக்கான டோக்கன்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், விடுமுறை உள்ளிட்ட சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பத்திரங்களை பதிவு செய்யலாம் என்ற நடைமுறையை அரசு உருவாக்கியுள்ளது.
இதையடுத்து, ஒரு சார்-பதிவாளர் இருக்கும் அலுவலகங்களில் சராசரியாக 100 டோக்கன், 2 சார் - பதிவாளர் இருந்தால் 200 டோக்கன் வழங்கப்படுகின்றன. சராசரியாக 10 தக்கல் டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. முகூர்த்த நாட்களில் கூடுதலாக 50 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அந்த அளவுக்கு தேவை அதிகமாக உள்ளதாலும், கூடுதல் வருவாய் கிடைப்பதாலும் விடுமுறை நாட்களிலும் பதிவுகள் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
பத்திரப்பதிவு: அதன்படியே, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டன.. இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் படுபிஸியாக காணப்பட்டன. காலையிலேயே ஏராளமானோர் சார் பதிவாளர் அலுவலகங்களில் குவிந்துவிட்டனர். இதனால், 238.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது..
ஆனாலும், பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்த போதிலும், பல்வேறு மாவட்டங்களில் சில பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கவில்லை.. அவை பூட்டியே கிடந்ததாகவும், இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.
பணியிடங்கள்: இதற்கு காரணம், தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிவுத்துறையில் காலியாக உள்ள 60 சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். எனவே, பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
அதுமட்டுமல்ல, தமிழகம் முழுதும் மண்டல வாரியாக, பதிவான பத்திரங்கள் எண்ணிக்கை குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஒரு அலுவலகத்தில், 60 டோக்கன்கள் பெறப்பட்ட நிலையில், 45 டோக்கன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளன. பயன்படுத்தாத மீதி டோக்கன்கள் தொடர்பான பத்திரங்கள் தாக்கலாகவில்லையாம்.. சிறிய அளவிலான குறைபாடுகள் இருந்தாலும், அதை பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சார் பதிவாளர்கள் இவ்வாறு செயல்படுவது சரியல்ல என்ற புகார் கிளம்பியிருக்கிறது.
அதிரடி உத்தரவு: எனவே, இதுபோன்ற பயன்படுத்தப்படாத டோக்கன்கள் தொடர்பான நபர்களை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவுக்கு வராதது குறித்து காரணம் கேட்டு, அதை தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் தினசரி பயன்படுத்தாத டோக்கன்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் சார் பதிவாளர்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications