மாமுல் தந்தால்தான் தொழிலை நடத்தவிடுவேன் என்பதை போல மும்மொழியை ஏற்றால்தான் நிதி என்கிறார்கள்- பிடிஆர்
சென்னை: மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் 2400 கோடி ரூபாய் நிதி வழங்க முடியும் என மத்திய அமைச்சர் கூறுவது மாமூல் தந்தால் தான் தொழிலை நடத்த விடுவேன் என ரவுடி துப்பாக்கியை எடுத்து எனது நெற்றி பொட்டில் வைத்து கேட்பது போல இருக்கிறது என விளாசி இருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
பிரதமர் மோடி, மறைந்த ஜெயலலிதா ஆகியோரையே தனது கேள்விக் கணைகளால் துளைத்து நேர்காணலில் பாதியில் கிளம்பி போக வைத்தவர் பிரபல பத்திரிகையாளர் கரண் தப்பார். அவருக்கு பிடிஆர் தற்போது பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழகத்தை விட கல்வியில் சிறந்த ஒரு மாநிலத்தை நீங்கள் காட்டிவிட்டால் எந்த கொள்கையையும் ஏற்க தயார் என சவால் விட்டு இருக்கிறார்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இதற்கு தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. குறிப்பாக திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்பு இல்லை எனவும், விருப்பப்பட்ட பிற மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என பாஜக கூறி வருகிறது.
மேலும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி பயிற்றுவிக்கப்படும், நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் இந்தி படிப்பதை திட்டமிட்டு திமுக தடுப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டுகிறது. மேலும் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை இருப்பதால் அது இந்தி திணிப்பு எனக் கூறி கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன மேலும் இந்த விவகாரத்தில் மீண்டும் ஒரு மொழிப்போரை சந்திக்க தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூறியுள்ளார்.
இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் 2400 கோடி ரூபாய் நிதி வழங்க முடியும் என மத்திய அமைச்சர் கூறுவது மாமூல் தந்தால் தான் தொழிலை நடத்த விடுவேன் என ரவுடி துப்பாக்கியை எடுத்து எனது நெற்றி பொட்டில் வைத்து கேட்பது போல இருக்கிறது என விளாசி இருக்கிறார் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். தி வயர் இணையதளத்துக்காக பிரபல பத்திரிகையாளர் கரண் தப்பாருடனான விவாதத்தில் பேசிய அவர்," எப்பொழுதும் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை குறிப்பாக இந்தியை எதிர்ப்பதாக பேசுகிறீர்கள். கல்வி மிக நுட்பமானது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தி குறிப்பாக எங்களுக்கு தேவையில்லை என்பதை நீதிக்கட்சி காலத்தில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். ஏற்கனவே இந்தியை திணிக்க நினைத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாடறியும். மத்திய அரசு இலவசமாக மூன்றாவது மொழியை கற்றுத் தருகிறது. நீங்கள் அதனை ஏன் தடுக்கிறீர்கள்? குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்குகிறீர்கள் உங்கள் பிடிவாதத்தால் அதனை தடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார்கள்.
இது மிகவும் நல்ல கேள்வி நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் பீகாரில் மும்மொழி தெரிந்த குழந்தைகள் எத்தனை பேர் இருக்கின்றனர். உத்தர பிரதேசத்தில் 3 மொழி தெரிந்த குழந்தைகள் எத்தனை பேர் இருக்கின்றன. அதை விடுங்கள் உத்திரபிரதேசத்தில் இரு மொழி தெரிந்த குழந்தைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். உங்களிடம் டேட்டா இருக்கிறதா. தேசிய அளவில் மும்மொழி கற்ற குழந்தைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். அவர்களது ரிசல்ட் என்ன என்பது குறித்தான டேட்டா இருக்கிறதா. ஒரு வலுவான ஆதாரம் இல்லாமல் நாங்கள் எப்படி அதனை ஏற்றுக் கொள்ள முடியும்.
எங்கள் பிள்ளைகள் எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். அவர்களுக்கு தேவையான மொழியை படிக்க நாங்கள் என்றும் தடையாக இருந்ததில்லை. தமிழகத்தில் தான் இந்தி பிரச்சார சபாக்கள் அதிகமாக செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் தவிர்த்து பிற தனியார் பள்ளிகள் சிபிஎஸ்சி பள்ளிகளில் மும்மொழி கற்க எந்த தடையும் இல்லை. எங்கள் நிதியை செலவழித்து எங்கள் பொருளாதாரத்தையும் மனிதவளத்தையும் பயன்படுத்தி எங்கள் மாணவர்களின் கற்றல் திறனை பலப்படுத்த எங்களுக்கு தெரியும். வெறும் வாய்ச்சொல் அடிப்படையில் பேச விரும்பவில்லை. டேட்டா இருந்தால் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்காது. ஏற்கனவே இந்தி தான் தேசிய மொழி எனக் கூறிய முப்பது மொழிகளை அழித்து விட்டார்கள். எங்கள் குழந்தைகளுக்கு எந்த மொழி தேவையோ அவர்கள் அதனை கற்றுக் கொள்ளட்டும். நாங்கள் தடுக்கவில்லை அல்லது இந்தி கற்றுத் தரும் பள்ளிகளை அழிக்கவில்லை. ஆனால் தமிழக அரசு தமிழை தான் கற்றுக் கொடுக்கும். கூடுதலாக ஆங்கிலம் மட்டுமே.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக அரசின் பிடிவாதத்தால் 2400 கோடி பணம் இல்லை என்கிறார். அதை வைத்து பள்ளிகள் கட்டமைப்பை வலுப்படுத்தலாமே அவர்களுக்கு தேவையான ஆய்வகங்கள் ஆசிரியர்களை பணியில் அமர்த்தலாமே என கரண் தப்பார் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்," நான் ஒரு தொழிலை ஆரம்பிக்கிறேன். அந்த தொழிலுக்கு பாதுகாப்பு தர வேண்டிய நபர் ஒரு ரவுடி போல துப்பாக்கி எடுத்துக்கொண்டு எனது நெற்றியில் வைத்து மாமுல் தர வேண்டும். அப்போதுதான் தொழிலை நடத்த முடியும் என சட்ட விரோதமாக கேட்கிறார். அவர் மிரட்டுவதற்காக நான் மாமூல் தர வேண்டுமா? நியாயப்படி நீங்கள் துப்பாக்கி எடுத்து என் தலையில் வைத்து மிரட்டுபவரிடம் தான் பேச வேண்டும். என்னிடம் பேசக்கூடாது" என்றார்.
அவரது பதிலால் கரண் தப்பாரே ஒரு நிமிடம் மலைத்துப் போய்விட்டார். பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதா போன்றவர்களையே தனது கேள்வியால் திணற வைத்த கரண் தப்பாரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு நொடி மடக்கிவிட்டார். தற்போது இந்த வீடியோ யூட்யூப் ட்ரெண்டிங்கில் 12வது இடத்தில் உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications