Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடியை மட்டும் போலீஸ் நெருங்காதாம்.. அரசுக்கும் அவருக்கும் “ரகசிய கூட்டு”.. புகழேந்தி பரபர!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரத்தில் திமுக அரசுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே என்ன அட்ஜெஸ்ட்மெண்ட் என்று சொல்லிவிடுங்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன. மேலும், அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

Pugazhendhi accuses that dmk government mutual understanding with edappadi palanisamy

கோடநாடு மர்மம்: இதில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2017 ஏப்ரல் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அதேபோல் சயான் சென்ற கார் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இதில் சயானின் மனைவி, மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர்தப்பினார். கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இப்படி கோடநாடு வழக்கோடு சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பரபரப்பை கிளப்பிய தனபால்: இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தனபால், "கோடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் எனது தம்பி கனகராஜை பெருந்துறையில் சந்தித்தேன். என்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில்தான் 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். அந்த 5 பெரிய பைகளை சேலம், சங்ககிரியைச் சேர்ந்த சிலரிடம் கொடுத்தார்." என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்றும் கோரினார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஆவேசமாக பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "யாரோ ஒருவர் சொன்னதை வைத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எனக்கு தொடர்பு இருக்கிறது என்று கேள்வி கேட்கவோ, பத்திரிகையில் செய்து போடுவதோ கூடாது. கனகராஜ் ஜெயலலிதாவின் ஓட்டுநர் அல்ல; அவர் சசிகலாவின் ஓட்டுநர். இனிமேல் யாராவது ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று சொன்னால் வழக்கு போடுவேன்." என எச்சரிக்கை விடுத்தார்.

புகழேந்தி பேட்டி: இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி, "ஆவணங்களை எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் எடுத்து வந்ததாக கனகராஜ் கூறியதாக கனகராஜின் அண்ணன் தனபால் சொல்கிறார். இதற்கு மேலும் என்ன வேண்டும்? கொலை செய்யச் சொன்னதாக வீடியோ ஆதாரம் தான் வேண்டுமா?

கோடநாடு கொலை கொள்ளை நடந்த அன்றைக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இல்லை. ஓபிஎஸ் தனியாக தர்மயுத்தம் நடத்தினார். மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்ததால் தான் ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கையே போனது. பாஜக செய்த கூத்தால் தான் அது நடந்தது.

கோடநாடு வழக்கில் எல்லா பக்கமும் போலீஸ் போகுமாம். ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் மட்டும் நெருங்காதாம். என்ன அண்டர்ஸ்டாண்டிங் என்றாவது சொல்லித் தொலையுங்கள். இந்த அரசுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே என்ன அட்ஜெஸ்ட்மெண்ட் என்று சொல்லிவிடுங்கள். இனி இந்த அரசிடம் கோடநாடு வழக்கு பற்றி எதுவும் கேட்க மாட்டோம்.

திமுக அரசு எடப்பாடியுடன் அண்டர்ஸ்டாண்டிங்: குற்றவாளி சொல்கிறார், அவரது அண்னன் சொல்கிறார், ஆதாரம் இருக்கிறது. அத்தனை இருந்தும் எடப்பாடி பழனிசாமிக்கு கிட்டே கூட போகவில்லை. கோடநாடு கொலை வழக்கு குற்றவாளி வெளில சுத்திட்டு இருக்கான். கனகராஜ், ஜெயலலிதாவின் டிரைவரே இல்லை என்று சொல்கிறார். அப்படி சொன்னால் கேஸ் போடுவேன் என்கிறார்.

குற்றப் பத்திரிக்கையிலேயே கனகராஜ் ஜெயலலிதாவின் மாற்று ஓட்டுநர் என இருக்கிறது. குற்றப்பத்திரிக்கையில் அப்படி பதிவு செய்யப்பட்ட போதே அவர் ஜெயலலிதாவின் டிரைவர் இல்லை என சொல்லியிருக்கலாமே? கனகராஜ் கார்டனிலேயே தான் இருந்தார். அவர் ஜெயலலிதாவின் டிரைவர் தான். துணிச்சல் இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள்." என சவால் விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+