முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி மனு.. சென்னை ஐகோர்ட்டில் இன்று மாலை அவசர விசாரணை!
சென்னை: முன் ஜாமின் கோரி புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஜெகன்மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெகன்மூர்த்தியின் கோரிக்கையை ஏற்று அவரது முன் ஜாமீன் மனு இன்று மாலை 5.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இதில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.
காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். மேலும் பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி வீட்டில், அவரை கைது செய்ய போலீசார் நேற்று சென்ற போது, புரட்சி பாரதம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
மேலும், ஏராளமானோர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்து குவிந்தனர். ஜெகன் மூர்த்தியை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புரட்சி பாரதம் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் சென்றபோது ஜெகன்மூர்த்தி அவரது வீட்டில் இல்லாததால் அவர்கள் திரும்பினர்.
தன்னை கைது செய்வதை எதிர்த்து திரண்ட ஆதரவாளர்களைப் பயன்படுத்தி ஜெகன்மூர்த்தி அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெகன்மூர்த்தி தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காதல் விவகாரத்தில் இளைஞரைக் கடத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அவரது தரப்பின் கோரிக்கையை ஏற்று இன்று மாலை 5.30 மணியளவில் விசாரணை நடைபெற உள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications