புஷ்பானா ஃபயர் இல்ல வைல்டு ஃபயர்.. பாகுபலி 2ஐ அடிச்சு தூக்கிய அல்லு அர்ஜுன்! வசூலை கேட்டீங்களா?
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் உலகம் முழுவதும் 1871 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் நாளில் இருந்தே பல வசூல் சாதனைகளை முறியடித்த இந்த திரைப்படம் தற்போது பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா-2 படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். புஷ்பா முதல் பாகத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து புஷ்பா 2 படம் உருவாகி ரிலீசாகியுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே நடித்த நட்சத்திரங்களுடன் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.
புஷ்பா முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்த நிலையில், புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலிலா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். முதல் பாகம் வெறும் 250 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் இரண்டாம் பாகம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மேலும் முதல் பாகத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக பணியாற்றிய நிலையில், இரண்டாம் பாகத்திற்கு 4 இசையமைப்பாளர்கள் இணைந்துள்ளனர். அந்த வகையில், தேவி ஸ்ரீ பிரசாத், தமன், சாம் சி.எஸ். மற்றும் அஜனீஷ் லோகநாத் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.
தற்போது புஷ்பா 2 தி ரூல் படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி இருந்த நிலையில், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வசூல் வேட்டை செய்து வருகிறது. மாஸ் ஆக்சன் படமான புஷ்பா 2 படம் முதல் நாளிலேயே 294 கோடி ரூபாய் வசூல் செய்ததோடு, இந்தியாவிலேயே முதல் நாளில் அதிகம் வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை படைத்ததும், மேலும் வெறும் ஆறு நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலையும் தாண்டியது. வெளியான சில நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டியது. அதிவேகமாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டிய திரைப்படம் என்ற பெருமையையும் புஷ்பா 2 பெற்றுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில், ரீலீசான தேதியில் இருந்து இந்த படம் ரூ.1871 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீசான போது அல்லு அர்ஜுனை பார்க்க வந்த பெண் நெரிசலில் சிக்கி பலியானது தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதையடுத்து படத்துக்கு கூடுதல் விளம்பரம் கிடைத்தது. இதனை அடுத்து புஷ்பா 2 படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இன்னும் சில நாட்களில் படத்தின் வசூல் 2000 கோடி ரூபாயை எட்டும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இதன் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 கோடி ரூபாய் வசூலை எட்டிய படம் என்ற சாதனையை புஷ்பா-2 படைக்க இருக்கிறது. இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் அதிகபட்சமாக ஆமீர்கான் நடிப்பில் வெளியான டங்கல் படம் 1950 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அதற்கு அடுத்த இடத்தில் 1810 கோடி ரூபாய் வசூலுடன் பாகுபலி-2 இரண்டாவது இடத்தில் இருந்தது
தற்போது 1871 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 தாண்டி இருக்கும் நிலையில் பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது புஷ்பா. 2000 கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைக்க இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications