கொரோனா வைரஸை தடுக்க இதுதான் ஒரே வழி.. பேரிடர் நிர்வாக துறை ஆணையர் எச்சரிக்கை
சென்னை: கொரோனா வைரஸை தடுக்க தனிமைப்படுத்தி கொள்வதே ஒரே வழி என தமிழக பேரிடர் நிர்வாக துறை ஆணையர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்க வழிதெரியாமல் உலகமே விழி பிதுங்கி வருகின்றன. இதற்கான தடுப்பு மருந்துகள் என்று ஒவ்வொரு நாடுகளும் ஒரு சில மருந்துகளை பயன்படுத்துகின்றன. அதை எல்லாம் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கவில்லை. இதுவரையில் கொரோனாவை இந்த மருந்து தடுக்கும் என்று எதுவும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.
மனிதர்களை கொல்லும் கொடூர கொரோனா வைரஸ் பரவுவது கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அளவில் பரவி வருகிறது.

தமிழகத்தில் 6 பேருக்கு
இது கிட்டதட்ட இரண்டாம் கட்டம் ஆகும். மூன்றாம் கட்டமான சமூகத்துக்கே பரவுவது என்பது மிகவும் ஆபத்தானது. அந்த நிலை தற்போது சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், ஜெர்மனி, தென்கொரியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. தமிழகததில் இதுவரை 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும 333 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வர வேண்டாம்
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தனிமைப்படுத்தி கொள்வதே ஒரே வழி என தமிழக பேரிடர் நிர்வாக துறை ஆணையர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்திய அரசும், தமிழக அரசும் தீவிரம் காட்டி வருகிறது. இன்று வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம்.

கை கழுவதல் வேண்டும்
மேலும் இன்று மருத்துவமனைகளுக்கு தினசரி மருத்துவ பரிசோதனைகக்காக சென்று நர்ஸ், டாக்டர்களிடம் சென்று நேரத்தை வீணடிக்க வேண்டாம். வாட்ஸ் அப் பேஸ்புக்கில் வரும் வதந்திகளை தடுக்க வேண்டும். கை கழுவதை கடைபிடிக்க வேண்டும். தொடர்ந்து இதை நாம் கடைபிடிக்க வேண்டும். வைரஸ் பவுவதை தடுக்க தனிமைப்படுத்தி கொள்வதே ஒரே வழி.

தேவையற்ற பதற்றம்
சாலைகளில் கிருமி நாசினி கொண்டு தூய்மை படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் இந்நோய் குறித்து விழிப்புணர்வு உள்ளது கொரோனா குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டாம். அதேநேரத்தில் அலட்சியாமாகவும் இருக்க வேண்டாம் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்" இவ்வாறு கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications