வாண்டுகளுக்கு குட் நியூஸ்..பெற்றோர் பாடு திண்டாட்டம்! காலாண்டு லீவு நீட்டிப்பு.. வெளியான அறிவிப்பு
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு குறைந்த நாட்களே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கையை அடுத்து விடுமுறை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.

கடந்த ஜூன் மாதம் 2023 24 கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கிய நிலையில் முதல் பருவ தேர்வுகள் நிறைவடைந்து தற்போது காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடப்பாண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு கிட்டத்தட்ட நிறைவடைந்து இருக்கிறது.
இன்னும் இரண்டு - மூன்று தேர்வுகள் மட்டும் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஆண்டு 220 வேலை நாட்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் 210 வேலை நாட்கள் இருந்த நிலையில் இந்த ஆண்டு 10 நாட்கள் உயர்த்தப்பட்டதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டு புதிய காலண்டர் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே பள்ளிக் கல்வித் துறை காலண்டரில் குறிப்பிட்டிருந்தபடி காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி 11-ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில், செப்டம்பர் 20ஆம் தேதி ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
27ஆம் தேதிக்குள் காலாண்டு தேர்வு முடித்து அதற்கு பிறகு விடுமுறை அளிக்கும் வகையில் அட்டவணையானது அறிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து 27ஆம் தேதி தேர்வுகள் நிறைவடையும் நிலையில், 28 முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, அக்டோபர் 2ஆம் தேதி புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. ஐந்து நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அக்டோபர் மூன்றாம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்த நிலையில் மாணவர்களின் விடைத்தாள் திருத்தம், மதிப்பெண் பட்டியல் வெளியீடு, தயாரிப்பு உள்ளிட்ட பல பணிகள் இருப்பதால் காலாண்டு விடுமுறையை அதிகரிக்க வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கடிதம் எழுதினார். அதில் கடந்த ஆண்டுகளில் ஒன்பது நாட்கள் காலாண்டு ஒருமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்து நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. அதில் சனி மற்றும் ஞாயிறு போக 2 வேலை நாட்கள் மட்டுமே விடுமுறை. அதிலும் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் இரண்டு நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பிறகு வெள்ளிக்கிழமை பள்ளி செயல்படும் நிலையில் அதற்கு பிறகு அக்டோபர் மூன்றாம் தேதி நான்காம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் மொத்தம் ஒன்பது நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் என கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து காலாண்டு தேர்வு விடுமுறை அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பது குறித்தான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கையையடுத்து காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications