விஜயகாந்த் வீட்டிலிருந்து வந்த போன் கால்.. விளக்கிய பிரேமலதா! தழுதழுத்த குரலில் விவரித்த ராதாரவி!
சென்னை: நடிகர் விஜயகாந்த் வீட்டிலிருந்து போன் கால் வந்தது என்றும் அதை தான் எடுக்கவில்லை என்றும் நடிகர் ராதாரவி கண்ணீருடன் வேதனை தெரிவித்திருந்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் பூரண நலம் பெற்று பழையபடி மக்கள் தொண்டாற்ற வேண்டும் என லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில் மக்களின் பிரார்த்தனை பலிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடலுக்கு ஏராளமான திரைப்பிரபலங்களும் அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவை கேட்டு நடிகர் தியாகு, டேய் விஜி போய்ட்டியேடா, என்னை விட்டு போய்ட்டியேடா என அழுது கொண்டே சாலிகிராமம் வீட்டிற்கு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்.

விஜயகாந்துக்கு சினிமா துறையில் நெருக்கம் என்றால் ராதாரவி, தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், பாண்டியன், வாகை சந்திரசேகர் ஆகியோர்தான். இவர்களுடன் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஒன்று சேர்ந்து அரட்டை அடிப்பார்களாம்.
இத்தனை நெருக்கமான நண்பர்களில் விஜயகாந்துக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததும் அவரை பார்க்க முடியாமலும் ராதாரவி உள்ளிட்டோர் தவித்து வந்தனர். விஜயகாந்துக்கு பிறந்த நாள் விழாவின் போது ராதாரவி தனது மனக்குமுறலை கொட்டிவிட்டார். ஒரே ஒரு முறை விஜிம்மாவை பார்க்க அனுமதி கொடுங்கள் என கேட்டு கண் கலங்கினார்.
இதை ஒரு விமர்சனமாக கூட முன் வைத்தார். இதற்கு பிரேமலதாவும் பதில் அளித்திருந்தார். கேப்டனை பார்க்க வேண்டும் என எல்லாரும் கேட்கிறார்கள். இதற்காக நாங்கள் யாரெல்லாம் பார்க்க விரும்புகிறார்களோ அவர்களை ஒன்றிணைத்து கேப்டனை பார்க்க அனுமதி வழங்குகிறோம் என விளக்கியிருந்தார்.
இந்த நிலையில் விஜயகாந்த் இறப்பின் போது அவருடைய உடலுக்கு ராதாரவி அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது பிரேமலதாவுக்கு ராதாரவி ஆறுதல் கூறிவிட்டு சில நிமிடங்கள் எதையோ பேசிவிட்டு விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அவர்கள் பேசுவதில் பிரேமலதாவின் சைகையை வைத்து பார்க்கும் போது ஏதோ அன்றைக்கு என சொன்னது போல் இருந்தது. ஆனால் என்னவாக இருக்கும் என தெரியவில்லை.

இந்த நிலையில் விஜயகாந்த் நினைவுகளை பல்வேறு சேனல்களுக்கு ராதாரவி பேட்டி அளித்து வருகிறார். அதில் அவர் கூறுகையில் நானும் விஜயகாந்தும் ஒன்றாக திரைப்படங்களில் நடித்திருந்தோம். அவை ஒரு சீசன் போல் இருந்தது. நட்பு பிரிவதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும். ஆனால் எங்களுக்குள் அப்படிப்பட்ட கருத்து வேறுபாடே வந்தது கிடையாது.
என்னை பார்க்க நான் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விஜயகாந்த் வருவார். அவரை பார்க்கும் நான் செல்வேன். எனக்கு கோபம் வந்தால் திட்டுவேன் பிறகு அன்பை பொழிவேன். அது போல் விஜயகாந்துக்கு ஒரு குணம் அனைவருக்கும் வாரி வழங்குவதுதான். விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த போது பிரேமலதா என்னிடம் "விஜயகாந்த் குணமடைந்து வீட்டிற்கு வந்த போது அவரை பார்க்க வேண்டும் என சொன்னீர்களே , வந்து பாருங்கள்" என சொல்வதற்காக பிரேமலதா எனக்கு போன் செய்தாராம்.
ஆனால் அவரிடம் இருந்து வந்த போனை நான் எடுக்கவில்லை. ஒரு வேளை போனை எடுத்திருந்தால் நான் விஜயகாந்தை ஒரு முறையாவது நேரில் உயிருடன் பார்த்திருப்பேன் என கண்கலங்கினார் ராதாரவி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications