"ஒரு நம்பர் தான வித்தியாசம்! பில் தான் வந்தாச்சே விடுங்கப்பா.." ரபேல் வாட்ச்.. வானதியின் அடடே பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை ரபேல் வாட்சை வெளியிட்ட நிலையில், அத்துடன் குறித்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்த்தால், அது மீண்டும் விவாதத்தை அடுத்த லெவலுக்கே எடுத்துச் சென்றுள்ளது. இதனிடையே பாஜகவின் வானதி சீனிவாசன் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டே அண்ணாமலை பல லட்சம் மதிப்பிலான ரபேல் வாட்ச்சை கட்டியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. அப்போதே இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார்.

Rafale watch bill issue You asked bill not serial number says Vanithi Srinivasan

அதாவது, ரபேல் வாட்ச் பில்லை வெளியிட முடியுமா என்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு திமுக அமைச்சர்களின் சொத்து பட்டிலை வெளியிடுவேன் என்றும் அத்துடன் ரபேல் வாட்ச் பில்லை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.

ரபேல் வாட்ச்: இதனிடையே நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுகவினரின் சொத்து பட்டியல் என்று கூறி ஒரு எக்ஸல் சீட்டை வெளியிட்டார். அதில் திமுகவின் டாப் தலைவர்களின் சொத்து மதிப்பு என்று கூறி பல பாயிண்டுகள் இருந்தது. இந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியிருந்தார்.

அதேபோல அண்ணாமலை தனது ரபேல் வாட்ச் குறித்தும் விளக்கியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் ரபேல் வாட்சை கோவை மாவட்டத்தை சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து வாங்கினேன் நபரிடம் இருந்து நான் ரபேல் வாட்சை வாங்கினேன்.. ரபேல் வாட்ச்சை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினேன்.

பில்லை பாருங்க: அவர் ரபேல் வாட்ச் வாங்கியதற்கான பில்லும் இருக்கிறது. நான் அவரிடம் இருந்து வாங்கிய பில்லும் இருக்கிறது. இதை இப்போது வெளியிடுகிறேன். இருப்பினும், நான் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது வாங்கிய லஞ்சப் பணத்தில் ரபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் திட்டமிட்டு பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். அதற்கான ஆதாரம் இது. ரபேல் வாட்ச் 147ஐ நான் வாங்கி இருந்தேன். அந்த எண்ணிற்கான பில் இருக்கிறது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த பதில் ரபேல் வாட்ச் குறித்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்த்தால், அது மீண்டும் விவாதத்தை அடுத்த லெவலுக்கே எடுத்துச் சென்றுள்ளது. ஏனென்றால் கடந்தாண்டு இந்த விவகாரம் எழுந்த போது அண்ணாமலை, இது தொடர்பான கேள்விக்கு, "ரபேல் விமானங்கள் இந்திய பாதுகாப்புத் துறையில் முக்கியமானது. அந்த ரபேல் விமான பாகங்களைக் கொண்டு 500 வாட்சுகளை செய்தார்கள்.

Rafale watch bill issue You asked bill not serial number says Vanithi Srinivasan

குழப்பம்: அதில் என்னுடைய வாட்ச் 149ஆவது. ரபேல் விமானத்தில் உள்ள அனைத்து பாகங்களும் இந்த வாட்ச்சில் இருக்கும். இதனால் நான் இந்த வாட்ச்சை வாங்கி கட்டியுள்ளேன். எனது உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் எனது உடலில் இருக்கும். ஏனென்றால் நான் ஒரு தேசியவாதி.. பிரிவினைவாதி இல்லை" என்றெல்லாம் அவர் பேசியிருந்தார். அப்போது 149ஆக இருந்த வாட்ச் நம்பர் இப்போது 147ஆக மாறியது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அண்ணாமலை கையில் கட்டியுள்ள ரபேல் வாட்ச் பெல் அண்ட் ராஸ் என்ற நிறுவனம் தயாரித்த வாட்ச் ஆகும். இதன் இந்திய மதிப்பு 4.40 லட்சம் ரூபாய் ஆகும். அமைச்சர் செந்தில் பாலாஜியும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். சீரியல் நம்பர் மாறியது குறித்துக் கேட்ட அவர், 4 லட்சத்திற்கு வாட்ச்சை வாங்கி அண்ணாமலைக்கு 3 லட்சத்திற்கு ஏன் விற்றார்கள் என்றும் கேட்டிருந்தார்.

வானதி சீனிவாசன்: இதனிடையே இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் அடடே பதிலை அளித்துள்ளார். நேற்று வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் ரபேல் பில்லில் முரண்பாடு இருக்கிறது என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு வானதி சீனிவாசன் என்ன முரண்பாடு என்று கேட்டார். அண்ணாமலை தன்னிடம் இருப்பாகச் சொன்னது 149ஆம் எண் வாட்ச்.. ஆனால், 147ஆவது வாட்சின் பில் தான் இருக்கிறதே என்றே கூறுகிறார்.

அதற்கு வானதி சீனிவாசன், "149க்கும் 147க்கும் இடையே இடையில் ஒரு நம்பர் தானே வித்தியாசம்.. எதோ பெரிய வித்தியாசம் இருப்பது போலச் சொல்கிறீர்கள். பில் கேட்டீர்கள். பில் வந்துவிட்டது தானே அவ்வளவு தான்.. நீங்க பில் தானே கேட்டீங்க சீரியல் நம்பரா கேட்டீங்கா.." என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார். அப்போது பின்னால் இருந்த பாஜக நிர்வாகி, சீரியல் நம்பர் எல்லாம் ஒரு பிரச்சினையாக என்று சப்போர்ட்டிற்கு வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+