வயிற்றெரிச்சல்.. காங். "பேராயுதம்".. அதை முதல்வர் ஆதரிக்கிறார்.. மீண்டும் ஸ்டாலின் மீது பாய்ந்த பாஜக
ராகுல் காந்தியின் பாராளுமன்ற பேச்சினை தமிழக பாஜக விமர்சித்துள்ளது
சென்னை: "பிரித்தாள நினைக்கிறது காங்கிரஸ்.. அதற்கு திமுகவையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறது... ராகுல் காந்தி வயிற்றெரிச்சலில் பேசியிருக்கிறார்" என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரை இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
"மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா" என்ற கருத்தை வலியுறுத்தியதோடு, பாஜக எந்த காலத்திலும், வாழ்நாளில் தமிழகத்தை ஆளவே முடியாது என்றும் ராகுல்காந்தி ஆவேசமாக பேசியிருந்தார்.

அரசியலமைப்பு சட்டம்
மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்று அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை ராகுல்காந்தி பலமுறை வலியுறுத்தி, கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்த்துள்ளார்.. அவரது இந்த பேச்சை முதல்வர் ஸ்டாலினும் வரவேற்று கருத்து கூறியிருந்தார்.. ஆனால், பாஜக தலைவர்கள் அத்தனை பேரும் ராகுல் மீது பாய்ந்தனர்.. விமர்சித்தும், கண்டித்தும், குற்றஞ்சாட்டியும், புகார் கூறியும் வருகின்றனர். பாஜக அமைச்சர்கள் அனைவருமே ராகுலை விளாசி கொண்டிருக்கிறார்கள்.

ராகுல்காந்தி
இங்கே தமிழகத்திலும் ராகுலை பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. அந்த வகையில் பாஜகவின்
மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி, பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி தந்துள்ளார். தமிழ்நாட்டு மக்களை பேராயுதமாக வைத்து பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல் காந்தி முயல்கிறாரா என்று அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.. அதற்கு நாராயண் திருப்பதி விரிவாக ஒரு பதிலை தந்துள்ளார்.. அந்த பதிலை தன்னுடைய ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார். அவர் தந்த பதில் இதுதான்:

பிளவு மனப்பான்மை
"ராகுல் காந்தி நாடாளுமன்ற அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, எதார்த்தத்தை இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. இந்தியாவில் நிர்வாக வசதிக்காகத்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை உணராமல், தெரியாமல் பேசியிருக்கிறார்... 1947-ல் எப்படி இந்த நாட்டை காங்கிரஸ் பிளவுபடுத்தியதோ அதே மனப்பான்மையோடு இப்போது ராகுல் பேசியிருக்கிறார். அதிகாரம் இல்லாமல் ஏழு ஆண்டுகளாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையே இந்தப் பேச்சு காட்டுகிறது. அதனால்தான் பிரிவினையை விதைக்கும் சிந்தனையோடு ராகுல் பேசியிருக்கிறார்.

காங்கிரஸ்
இந்த அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்லியிருக்கிறது.. டாக்டர் அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது கூட புரியாமல் இருக்கிறார் ராகுல்.. கிட்டத்தட்ட 12 வருடங்களாக எப்படி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்... இப்போதுதான் காங்கிரஸ் கட்சி ஏன் அதலபாதாளத்துக்குச் சென்றது என்பது புரிகிறது. சரியான தலைமை காங்கிரஸுக்கு இல்லை என்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்தியிருக்கிறது. ராகுல் காந்தி தவறாகப் பேசிவிட்டார்.

முதல்வர் ஸ்டாலின்
அதை முதல்வர் ஆதரிப்பதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.. தமிழ்நாட்டில் இருப்பவர்களின் குரல் இந்தியர்களின் குரலாகத்தான் எப்போதும் ஒலித்திருக்கிறது. பிரித்தாள நினைக்கிறது காங்கிரஸ்.. திமுகவையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறது... ராகுல் காந்தி வயிற்றெரிச்சலில் பேசியிருக்கிறார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி அழிந்தேவிட்டது... தமிழ்நாட்டில் திமுகவின் தயவில் ஏதோ சில இடங்களில் வெற்றி கிடைத்தது... அதுவும் பறிபோய்விடக் கூடாது என்ற வேகத்தில், பிடித்துக்கொள்ள ஒரு பிடிமானமாகத் திமுக அதுவும் கை நழுவிப் போய்விடக் கூடாதே என்றுதான் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருக்கிறார்" என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications