இனி ரயில் பயணிகள் புகார் தரும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.. திருநங்கைகளுக்கு போலீஸார் அட்வைஸ்
சென்னை: ரயில் பயணிகளிடம் இருந்து புகார் வரும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என திருநங்கைகளிடம் ரயில்வே போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பெரும்பாலான திருநங்கைகள் நன்கு படித்துவிட்டு கவுரவமான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நல்ல நிலையில் இருக்கும் திருநங்கைகள் அறக்கட்டளையை தொடங்கி கஷ்டத்தில் இருக்கும் திருநங்கைகளுக்கு உதவுகிறார்கள். கொரோனா, இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு கூட இவர்கள் உதவிகளை செய்திருந்தனர்.

அது போல் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் திருநங்கை, திருநம்பி என தெரியவந்தால் வீட்டை விட்டு அடித்து துரத்தாமல் கல்வியை கொடுக்க வேண்டும் என திருநங்கைகள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் முன்பை விட அவர்களுடைய வாழ்க்கை தரம் ஓரளவு உயர்ந்துவிட்டதாகவே கூறுகிறார்கள்.
இப்படி மகிழ்ச்சிகரமான பக்கங்கள் இருந்தாலும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைகள், கோயில்களில் சில திருநங்கைகள் பொதுமக்களிடமும் பயணிகளிடமும் பணம் கேட்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது போல் பணம் கேட்கும் போது இரு வேறு விதமான பிரச்சினைகள் எழுகின்றன.
ஒன்று பணம் இல்லை என சொன்னால் சில திருநங்கைகள் அசிங்கமாக பேசுவதும் தாக்குதலில் ஈடுபடுவதுமான செயல்களை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அது போல் மீண்டும் மீண்டும் பணம் கேட்கும் திருநங்கைகளை பொதுமக்களும் பயணிகளும் ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களால் தாக்குதல் சம்பவங்கள் ஏற்படுகின்றன.
சென்னை இருப்புப்பாதை காவல் மாவட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், சில சமயங்களில் பயணிகளிடம் அத்துமீறி நடந்துக் கொள்வதாகவும் இருப்புப்பாதை காவல் உதவி மையத்துக்கு அடிக்கடி புகாா்கள் வந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன் மீஞ்சூா் ரயில் நிலையத்தில் திருநங்கையுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு பயணி மரணம் அடைந்தாா். திருவொற்றியூா் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற திருநங்கையின் கால் துண்டானது. சங்க உறுப்பினா்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி இனி இதுபோன்ற புகாா்கள் ஏதும் வராமல் பாா்த்துக்கொள்ள வலியுறுத்தினாா். தொடா்ந்து புகாா்கள் வரும் பட்சத்தில் அவா்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினா்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications