ஒரு பக்கம் சூப்பர் ரெயின்.. மறுபக்கம் சுட்டெரிக்கும் வெயில்.. தமிழகத்துக்கு 2ம் இருக்கு!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என கூறப்படுகிறது
சென்னை: ஒரு பக்கம் சூப்பர் ஹெவி ரெயின்.. மறுபக்கம் சுட்டெரிக்கும் வெயில்.. தமிழக மாவட்டங்களில் மாறி மாறி வானிலை மாற்றங்கள் நிகழ போகிறது..
ஆம்பன் புயல் கரையை கடந்த நிலையில், வங்கக்கடலும், அரபிக்கடலும் இயல்பான தட்பவெட்ப நிலைக்குமாறி வருகின்றன.. இந்த புயல் உருவானபோது, தென் மாநிலங்களில் ஏற்பட்ட, வறண்ட வானிலை காரணமாக, பல இடங்களில், 5 நாட்களாக கடுமையான வெப்ப காற்று வீசி வருகிறது.

அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று 2 நாட்களுக்கு முன்பேயே வானிலை மையம் எச்சரித்தும் இருந்தது.. அதன்படி இன்றும் தமிழக வட மாவட்டங்களுக்கு வறண்ட வானிலை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட 11 மாவட்டங்களுக்கு வெயில் கொளுத்தப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த லிஸ்ட்டில் வழக்கம்போல் டாப்பில் உள்ளது சென்னைதான்.. சென்னை உட்பட, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் வெப்ப அலையுடன் கூடிய காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயில் 104 டிகிரியை தாண்டும் என்பதால், பகல் 11 மணி முதல் மதியம் 3 மணிவரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூரில் 2 நாட்களுக்கு வெயில் சற்று அதிகமாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 10 மாவட்டங்களில் மழைக்கும் வாய்ப்பு உள்ளதாம்.. தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, ஆகிய, 10 மாவட்டங்களில் கோடை மழைக்கு மிதமான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவிக்கும்போது, "மேற்கு திசை தரைக் காற்று தொடர்ந்து வீசக்கூடிய நிலையில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை அளவு 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகக் கூடும்.. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் ஏழு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.
எப்படியும் அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் வெயில் கொளுத்த போகிறது.. 10 மாவட்டங்களில் மழை பொழிய போகிறது!!!
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications