Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி உத்தரவு பிறப்பிக்கவில்லை.. ஆளுநர் மாளிகை மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.

Raj bhavan clarifies that Governor has not given permission to file a case against Annamalai

அண்ணாமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் பேசும் போது, மீனாட்சி அம்மன் கோவிலில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது முத்துராமலிங்க தேவர், அறிஞர் அண்ணாவை பார்த்து கடவுள் பக்தி இல்லாதவர்கள் கடவுள் பக்தி இருப்பவர்களை தவறாக பேசினால் மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டி இருக்கும் என எச்சரிக்கை செய்தார் எனவும், இதனால் பி.டி.ராஜனும் அண்ணாவும் மன்னிப்புக் கேட்டுவிட்டு ஓடினர் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் முத்துராமலிங்கத் தேவர் அவ்வாறு கூறவில்லை என பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. அண்ணாமலை கூறிய தகவலுக்கான எந்த ஆதாரமும் இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை இவ்வாறு இட்டுக் கட்டப்பட்ட கதைகளை கூறி மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். அண்ணாமலை பேச்சு குறித்த ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர், அண்ணாமலை மீது 2 பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிநாடு அரசின் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டார்.

Raj bhavan clarifies that Governor has not given permission to file a case against Annamalai

இந்நிலையில் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அளித்த புகாரின் பேரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாக தமிழக அரசு முடிவு செய்து, வழக்கு தொடர்வதற்கான அனுமதியை அளித்து உத்தரவிட்டது. தமிழக அரசின் முக்கிய ஆணைகள் வழக்கமாக ஆளுநரின் உத்தரவுடன் எனக் குறிப்பிட்டு வெளியாவது போன்றே இந்த அனுமதி ஆணையும் வெளியிடப்பட்டது.

அண்ணாமலைக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வெறுப்பை பரப்பி இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்த முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் ஒரு தனி நபரால் தாக்கல் செய்யப்பட்டதால், நீதிமன்றத்தின் விசாரணைக்கு, சிஆர்பிசியின் பிரிவு 196 இன் கீழ் மாநில அரசின் அனுமதி கட்டாயம். அதன்படியே தமிழக அரசு, அனுமதியை வழங்கியது.

இந்தச் சூழலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என்றும், இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை எதுவும் அறிந்திருக்கவில்லை தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து கடந்த 2 நாட்களாக ஆளுநர் மாளிகைக்கு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+