பாலுக்கு காவல் பூனை.. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குழுவின் தலைவர் ராஜகோபாலன்
சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளியில் பாலியல் புகாருக்குள்ளான ஆசிரியர் அந்த பள்ளியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குழுவின் தலைவராக இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியானது.
சென்னை கே கே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் 20 ஆண்டுகளாக வணிகவியல் துறையில் ஆசிரியராக இருப்பவர் ராஜகோபாலன். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்தார்.
அவர் பள்ளிகள் திறக்கப்பட்ட காலங்களில் மாணவிகளை தொட்டு பேசி பாலியல் சீண்டல்களையும் செய்துள்ளாராம். இதற்கு மறுக்கும் மாணவிகளை மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என கூறி மிரட்டுவாராம்.

வெளிச்சம்
இந்த நிலையில் இந்த ராஜகோபாலன் மீதான பாலியல் புகார்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இவர் மீது இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். மாணவிகளை சினிமாவுக்கு கூப்பிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளாராம்.

வீடியோ
ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்புவது, ஆன்லைன் வகுப்புகளின் போது குளித்துவிட்டு வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு நேராக வந்து அமர்வாராம். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களை பாடகி சின்மயி உள்ளிட்டோர் வெளியே கொண்டு வந்துள்ளனர்.

மாணவர்கள்
மேலும் மாணவர்களை போல் மாணவிகளை தொட்டு தொட்டு பேசுவதையும் செய்த இவர் திடீரென மாணவிகள் உடைமாற்றும் அறைக்கு சென்றுவிட்டு தவறுதலாக வந்ததாக சப்பைக் கட்டு கட்டுவாராம். இத்தனை அட்டூழியங்களை செய்த இந்த ராஜகோபாலன் யார் தெரியுமா?

பாலியல் வன்கொடுமை
பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குழுவின் தலைவர்தான் இந்த ராஜகோபாலன். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்களில் இது போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கு ஒரு தலைவரை நியமிப்பர். யாருக்காவது பாலியல் தொல்லை இருந்தால் அவர்கள் நேரடியாக இந்த தலைவரிடம் புகார் கொடுக்கலாம். ஆனால் பத்மசேஷாத்ரி பள்ளியில் பாலுக்கு காவல் பூனையை வைத்துள்ளார்கள் என பேசப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications