நடுரோட்டிலேயே.. எகிறி தப்பி.. சிக்கிய ராஜேந்திர பாலாஜி.. கொஞ்ச நஞ்சம் பேச்சா?.. இந்த அவமானம் தேவையா
ராஜேந்திர பாலாஜி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை: நடுரோட்டிலேயே முன்னாள் அமைச்சர்கள் யாராவது இப்படி கைதாகி பார்த்திருக்கிறோமா? தமிழகம் இப்படி ஒரு அவலத்தை முதல்முறையாக இன்று சந்தித்துள்ளது..!
வடிவேலு ஒரு படத்தில் "பேச்சாடா பேசுனே பேச்சு" என்று சொல்வாரே.. அதுதான் ராஜேந்திர பாலாஜி கைது நடவடிக்கையை பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.
விமர்சனம்
வீடியோக்கள்
Recommended Video

ராஜேந்திர பாலாஜி எப்போதெல்லாம் ஸ்டாலினை விமர்சிக்கிறாரோ, அந்த வீடியோக்கள் அத்தனையும் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டு வைரலாவதுண்டு.. காரணம் அவைகள் அனைத்திலுமே வார்த்தைகளின் எல்லைகள் மீறப்பட்டிருந்தன... "நீ ஒரு நல்ல ஆம்பளையா இருந்தால் என் ஊருக்கு வா பார்ப்போம்" என்று கீழ்த்தரமாக, அதேசமயம் ஒருமையிலும் இதுவரை யாருமே அரசியலில் சவால் விட்டதில்லை..

தரம் தாழ்ந்த பேச்சு
அதைவிட கொடுமை, எதிர்க்கட்சி என்றும் பாராமல், பொதுவெளி என்றும் பாராமல், அரசியல் நாகரீகம் எதுவுமே இல்லாமல் ராஜேந்திர பாலாஜி அன்று பேசிய பேச்சுக்களுக்கு இதுவரை அதிமுக தலைமை வருத்தமும் தெரிவிக்கவில்லை.. அவ்வளவு ஏன்? பாஜகவை இவர் புகழ்ந்து பேசுவதை பார்த்தால், இவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமே இல்லாதது போலவே இருக்கும்.. "அவரை கொஞ்சம் வாயை மூடிட்டு இருக்க சொல்லுங்க" என்று எடப்பாடி பழனிசாமி நெருக்கமானவர்களிடம் கடிந்து கொண்டாரே தவிர, நேரடியாக கண்டிக்கவில்லை.

ஸ்டாலின்
ஆனால், எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து, ராஜபாளையம் பிரச்சாரத்தில் ஸ்டாலின் வறுத்தெடுத்துவிட்டார். "ரவுடித்துறை அமைச்சர்.. பபூன் ரவுடி.. அவரை பார்த்தாலே பபூன் ஞாபகம் தான் வருது.. நான் எங்க போனாலும், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு கேப்பேன்.. ஆனால் முதன்முதலாக ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டுப்போடக் கூடாதுன்னு சொல்லி வாக்கு கேக்கறேன்.. ஜெயலலிதா இருந்திருந்தால் இவரெல்லாம் அதிமுகவிலேயே இருந்திருக்க மாட்டார். ஆட்சிக்கு வந்ததும், அவர் மீதுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை வேகப்படுத்தி, உண்மையை வெளிக் கொண்டுவந்து, அவரை ஜெயிலுக்கு அனுப்புவது தான் முதல் வேலை"..! என்று கர்ஜித்தார்..

சறுக்கல்கள்
அதற்கேற்றார்போல், சட்டரீதியான நடவடிக்கைகளும் திமுகவில் எடுக்கப்பட்டன.. அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே, ஒவ்வொரு வழக்கிலும் வலுவான ஆதாரங்கள் சேர்க்கப்பட்டன.. அனைத்துமே சட்டரீதியாகவே அணுகப்பட்டன.. இத்தனைக்கும் ஸ்டாலின் பதவியேற்றதும், சமாதான வழியை பல முறை முயன்றார் ராஜேந்திர பாலாஜி.. ஆனால் வெள்ளைக் கொடிக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது..

தலைமறைவு
ஊழல், மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜேந்திர பாலாஜி இத்தனை வார கால தலைமறைவுக்கு பிறகு இன்று கைதாகி உள்ளார்.. ஒவ்வொரு காரிலும் மாறி மாறி தப்பித்து கண்ணாமூச்சி ஆடி வந்த நிலையில், இன்று வசமாக சிக்கி கொண்டுள்ளார்.. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அதுவும், போலீசாரை பார்த்ததுமே ராஜேந்திர பாலாஜி தப்ப முயன்றுள்ளார்.. காரில் ஏறி அவர் தப்ப முயன்றபோதுதான், அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

ஜெயலலிதா
இந்த தமிழகம் எத்தனையோ தலைவர்களை கைது செய்துள்ளது.. அந்த கைது நடவடிக்கைகள் அனைத்துமே நாகரீகமானதாக இருந்தது.. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்களும் கைதாகி உள்ளனர்.. ஆனால் அவரவர் வீடுகளிலேயே கைது செய்யப்பட்டனர்.. அன்று ஜெயலலிதா கைதாவது முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது.. அதேபோல, கருணாநிதி கைதானது எதிர்பாராத ஒன்றாக அதுவும் விடிகாலையில் நடந்த அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது.. அப்படி இருந்தும், கைது நடவடிக்கைகள் வீடுகளில்தான் செய்யப்பட்டது..

அதிமுக
ஆனால், ராஜேந்திர பாலாஜி கைது அப்படி இல்லை.. டிட்டோ குற்றவாளி போலவே கைதாகி உள்ளார்.. கிரிமினல்களை வளைத்து பிடித்ததுபோல, சுற்றி வளைக்கப்பட்டுள்ளார்.. இவர் அதிமுகவின் ஒரு மூத்த தலைவர், அமைச்சராக பொறுப்பேற்றவர், மாவட்ட செயலாளராக இருப்பவர்.. கைது செய்ய போலீசார் தேடுகிறார்கள் என்றதுமே, நேரடியாக போலீசுக்கு சென்று சரணடைந்திருக்க வேண்டும்.. அல்லது எங்குமே ஓடி ஒளியாமல் சொந்த ஊரில், சொந்த வீட்டில் தங்கியிருந்திருக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு, இப்படி நடுரோட்டில் போலீசார் எகிறி பிடித்து கைது செய்யும் நிலைமைக்கு வந்துள்ளார்.. இந்த நிலைமைக்கு காரணம் சாட்சாத் ராஜேந்திர பாலாஜியேதான்..!

அவமானம்
நேர்மையாக இந்த வழக்கை சந்தித்து இருந்தால், கொஞ்சமாவது கவுரவமாக இருந்திருக்கும்... ஒரு கொள்ளைக்காரர் தப்பியோடும்போது போலீசார் மடக்கி கைது செய்வதை தான் பார்த்துள்ளோம். ஆனால், முன்னாள் அமைச்சர், அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்யும் நிலைமை உருவாகியுள்ளது. ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகத்தான் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? நீங்க பார்த்தீங்களா? அவர் சட்ட ரீதியான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்று ஜெயக்குமார் சப்போர்ட்டுக்கு அன்று ஓடிவந்தார்.. அப்படியானால், இன்று போலீஸை பார்த்ததும் ராஜேந்திர பாலாஜி ஏன் தப்பினார்? எதற்காக ஓடி ஒளிந்து கொண்டிருந்தார்? என்ற கேள்விகளும் நமக்கு இயல்பாகவே எழுகின்றன.. உப்பை தின்றவர் தண்ணீர் குடிக்கணும் என்பதுதான் அரங்கேறி உள்ளது.

டாடி
ஆக மொத்தம், மஞ்சள் சட்டை, கை நிறைய கயிறுகள், நெற்றிய நிறைய குங்குமம் என வலம் வந்து கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜி, போலீசில் சிக்காமல் தப்பிக்க எத்தனையோ போராடினார்.. எங்கெங்கோ மறைந்து வாழ்ந்தார்.. இறுதியில் சட்டம் தன் கடமையை செய்துவிட்டது.. மலையென நம்பிக் கொண்டிருந்த அந்த "டாடி"யும் இவரை காப்பாற்ற கடைசி வரை வரவில்லை..!
கடந்த முறை அதிமுக ஆட்சியில், திமுகவை அளவுக்கு அதிகமாக விமர்சித்தது ராஜேந்திர பாலாஜிதான்.. எடப்பாடி பழனிசாமிகூட, ஸ்டாலினை இந்த அளவுக்கு திட்டியதில்லை.. விமர்சித்ததும் இல்லை..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications