ஜெயலலிதா பாணியில் அரசியல் செய்ய வேண்டும்... ரஜினிக்கு ஆலோசகர்கள் அறிவுரை
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சியே தொடங்காத நிலையில் அவருக்கு சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே அவருடைய அரசியல் ஆலோசகர்கள் வகுப்பு எடுத்து வருகின்றனர்.
அதன்படி வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாணியை பின்பற்றி கூட்டணி விவகாரத்தில் நடந்துகொள்ள ரஜினி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாமகவுடன் ரஜினி கூட்டணி வைப்பார் என செய்திகள் உலா வந்துகொண்டிருக்கும் நிலையில், அவருக்கு அப்படி ஒரு எண்ணமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆலோசனைகள்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், தேர்தலை எதிர்கொள்வது பற்றி தனது அரசியல் ஆலோசகர்களை அடிக்கடி சந்தித்து பேசுகிறார். மேலும், தன்னுடன் யாரை சேர்த்து கொள்வது, யாரை சேர்க்கக் கூடாது என்பது பற்றி கூட விரிவாக ஆலோசித்து வருகிறார் ரஜினி.

அறிவுரை
இதனிடையே பாட்டாளி மக்கள் கட்சியை ரஜினி தன்னுடன் இணைத்துக்கொள்வார் என்றும், ரஜினியுடன் பாமக கூட்டு சேரும் எனவும் கடந்த இரண்டு மாதமாக செய்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன. இது பற்றியும் ரஜினி ஆலோசனை நடத்த தவறவில்லையாம். அப்போது ரஜினியின் ஆலோசனை குழுவில் உள்ள அரசியல் நோக்கர் ஒருவர், பாமகவுடன் கூட்டணி சேர்வது உகந்ததாக இருக்காது என்றும், அதன் சாதக பாதகங்கள் பற்றியெல்லாம் விலாவாரியாக விளக்கி கூறியிருக்கிறார். இதனால் பாமகவுடன் ரஜினி கூட்டணி வைப்பது கடினம் எனக் கூறப்படுகிறது.

சிறிய கட்சிகள்
ஜெயலலிதாவை பொறுத்தவரை பெரிய கட்சிகளை எப்போதுமோ தூக்கி சுமக்கமாட்டார். சிறிய கட்சிகளை மட்டுமே அதிமுக கூட்டணியில் சேர்த்து தேர்தலை எதிர்கொள்வார். அதுவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கையில் கொண்டு வந்துவிடுவார். ஆனால் அவர்களை வைத்து எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க வைப்பதோடு அனைத்து சமுதாய பிரதிநிதிகளுக்கும் தாம் பொதுவானவர் என்பதை காட்டிக்கொள்வார். உதாரணத்துக்கு செ.கு. தமிழரசனுக்கும் சீட் கொடுப்பார், தனியரசுவுக்கும் சீட் கொடுப்பார், கருணாசுக்கும் சீட் கொடுப்பார், தமிமுன் அன்சாரிக்கும் சீட் கொடுப்பார்.

பொதுவான கட்சி
ரஜினிகாந்திற்கு ஆலோசனை கூறும் டீம், பாமகவுடன் நீங்கள் கூட்டணி சேர்ந்தால் பட்டியலினத்தவர்கள் வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை, அதேபோல் விடுதலை சிறுத்தைகளை சேர்த்தால் வன்னிய சமுதாய மக்களின் வாக்குகள் கிடைக்காது என தெரிவித்திருக்கிறது. ஆகையால் ஜெயலலிதாவை போல் உங்கள் மீது எந்த சாதி முத்திரையும் விழாத வண்ணம் கூட்டணி விவகாரத்தில் முடிவெடுக்குமாறு ரஜினியிடம் ஆலோசனைக் குழு வலியுறுத்தி இருக்கிறது. அதனை கவனமாக கேட்டுக்கொண்ட ரஜினிகாந்த் அரசியல் பாதையில் ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வைக்க தொடங்கியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications