ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உங்கள் ரசிகர் மன்றத்தில் ஒருவர் கூடவா இல்லை?.. ரஜினிக்கு சீமான் பொளேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர் மன்றத்திலிருந்து ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவரை கூடவா உங்களால் தேர்வு செய்ய முடியவில்லை என ரஜினிக்கு சீமான் பொளேர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சித் தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் முன்னாள் நிர்வாகி அர்ஜுனமூர்த்தியை நியமனம் செய்துள்ளார். அது போல் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்துள்ளார்.

அர்ஜுனமூர்த்தியின் நியமனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்கள்

செய்தியாளர்கள்

அம்பேத்கரின் 64 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு தனது கட்சி அலுவலகத்தில் சீமான் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கருணாநிதி

கருணாநிதி

அவர் கூறுகையில் ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே நான், விஜயகாந்த் ஆகியோர் கட்சியை தொடங்கினோம். ரஜினிகாந்த் ஒரு அழுத்தம் காரணமாகவே கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். இதை நான் உறுதியாக நினைக்கிறேன்.

60 நாளில் ஆங்கிலம்

60 நாளில் ஆங்கிலம்

கூட இருப்பவர்கள் யாரோ ரஜினிகாந்தை தூண்டி விடுகிறார்கள். மொத்தமாகவே மக்களை அறிவு கெட்ட கூட்டம் என ரஜினிகாந்த் நினைக்கிறார் போலும். ரஜினியின் தேவை எங்கு உள்ளது. 60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி என்பது போல் அவரது கட்சி தொடக்க அறிவிப்பு உள்ளது.

ஒருங்கிணைப்பாளர்

ஒருங்கிணைப்பாளர்

கட்சி ஆரம்பிப்பது என முடிவு செய்துவிட்டீர்கள், நாங்கள் மோதுவதும் நிச்சயம் என முடிவு செய்து விட்டோம். உங்கள் ரசிகர் மன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்த ஒருவரை கூடவா உங்களால் தலைமை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்க முடியவில்லை?

மறு பக்கம் காங்

மறு பக்கம் காங்

யாரோ பாஜககாரரை தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கிறீர்களே. ஒரு பக்கம் பாஜககாரர், மறுபக்கம் காங்கிரஸ்காரர் , இப்படியிருக்கையில் நீங்கள் எப்படி மாற்றம் கொண்டு வருவீர், மாற்று அரசியலை கொண்டு வருவீர் என கடுமையாக கேள்விகளை எழுப்பி விமர்சனம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+