நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்
சென்னை: ரஜினிகாந்த் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக யூகங்கள் கிளம்பி 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ரஜினி காந்த் அரசியல்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். வரும் 2021 ஜனவரியில் கட்சி தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக இன்றைக்கு அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் ஊழல் அற்ற ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலை விரும்புவதாக முன்பு கூறியிருந்தார். அதன்படி தான் புதிய கட்சி தொடங்கப்போவதாக இன்று அறிவிதுள்ளார். ரஜினியின் அரசியல் வருகை குறித்து பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பிரபல தனியார் தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழக அரசியல் எப்படிபட்ட சூழ்நிலையில் இருக்கிறது என்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வருவது ஏற்கக்கூடியது.
சூப்பர் ஸ்டாராக மக்கள் அறியக்கூடிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பதற்கு மனபூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications