அரசியலுக்கு டாட்! என்டர்டெய்ன்மென்ட்டுக்கு கமா.. ரசிகர்களை மகிழ்வித்த அண்ணாத்த! சும்மா டக்கரு தலைவா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் கமா வைக்க நினைத்தவர்களுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

Recommended Video

    நடிகர் Rajinikanth-ன் அரசியல் பயணம்.. தொடக்கமும்.. முடிவும்..

    கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் ரஜினி அரசியலில் ஈடுபடுவாரா மாட்டாரா என எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த 2017இல் நிச்சயம் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். புத்தாண்டு பரிசாக தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.

    அதன் பிறகு 2020 டிசம்பர் மாதம் கொரோனா பரவலை அடுத்து தனது அரசியல் வருகைக்காக ரசிகர்களை பலிக்கடாவாக்க மாட்டேன் என கூறி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தார் ரஜினி.

    ரஜினி மீது கோபம்

    ரஜினி மீது கோபம்

    இதனால் ரசிகர்கள் பலர் விரக்தி அடைந்தனர். ரஜினி மீது கோபமும் கொண்டனர். ஆனால் ரஜினி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்பதை சிலர் உணர்ந்திருந்தனர். ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்ட சமயம் கொரோனாவுக்கு தடுப்பூசி என்பது அனைவருக்கும் கிடைக்காத சமயம் ஆகும்.

    கொரோனா

    கொரோனா

    இதனால் ரஜினி அவ்வாறு கூறியுள்ளார், கொரோனா முடிந்தவுடன் அல்லது கொரோனாவுக்கு அனைவரும் தடுப்பூசி போட்டவுடன் ரஜினி அரசியலுக்கு வருவார் என சிலர் நம்பி வந்தனர். அதாவது ரஜினி முடிவுரை எழுதினாலும் அன்பும் பாசமும் கொண்ட ரசிகர்கள் விடாமல் முன்னுரை எழுதி வந்தனர்.

    அமெரிக்காவில் சிகிச்சை

    அமெரிக்காவில் சிகிச்சை

    இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ரஜினி சென்று வந்த நிலையில் இன்றைய தினம் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

    வருங்காலம்

    வருங்காலம்

    இதையடுத்து ரஜினி வருங்காலத்திலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மேலும் மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு ரசிகர் மன்றமாக செயல்படும் என அறிவித்ததால் அவரது அரசியல் வருகைக்கு சிலர் கமா வைத்த நிலையில் ரஜினியே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+