2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர்- ரஜினி
Recommended Video
சென்னை: 2021-இல் சட்டசபை தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு முன்பே அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ரஜினியும் கமலும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.
இந்த நிலையில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தனித்தனியே பேட்டி அளிக்கையில் நாங்கள் இருவரும் தேவைப்படும் நேரத்தில் அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என தெரிவித்துள்ளனர்.

கோவாவில் விருது
இதை மற்ற கட்சிகள் கிண்டல் செய்து பேசின. இருவரும் வேறு வேறு சித்தாந்தங்களை முன் வைத்து வருகின்றனர். இவர்களுக்கிடையே எப்படி ஒத்துபோகும் என்றெல்லாம் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கோவாவில் சிறப்பு விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

தமிழக மக்கள்
இதையடுத்து கோவாவிலிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில் நான் கோவாவில் விருது வாங்கியதற்கு தமிழக மக்கள்தான் காரணம். நான் வாங்கிய சிறப்பு விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

கட்சி உறுப்பினர்கள்
கமலுடன் இணைந்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில், சூழலை பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு. மேலும் நான் தொடங்கும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்து பேசி எடுக்கப்படும். அப்போது சொல்கிறேன். இப்போது பேச விரும்பவில்லை என்றார்.

ரஜினிகாந்த
திராவிட மண்ணில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறாரே என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரஜினி, 2021-இல் சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் அற்புதத்தை, அதிசயத்தை 100-க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என்றார் ரஜினிகாந்த்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications