அப்பாவின் உடல்நிலை சரியில்லை.. பேரறிவாளனுக்கு மீண்டும் 1 மாதம் பரோல்.. தமிழக அரசு அதிரடி!
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார், பேரறிவாளன். சிறு வயதிலேயே கைது செய்யப்பட்ட இவர், பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரது தூக்கு தண்டனை மட்டும் நீக்கப்பட்டுள்ளது. அவரது விடுதலைக்காக அவரின் தாய் அற்புதமம்மாள் போராடி வருகிறார்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் காரணம் கட்டி பரோல் கேட்கப்பட்டது.
குயில்தாசன் உடல் நிலை மோசமானதால் சிகிச்சை பெற்று வருகிறார். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மூலம் பேரறிவாளனுக்கு இந்தப் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்கு வழங்கப்படும் இரண்டாவது பரோல் இது. இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு பேரறிவாளனுக்கு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தது.
திங்கட்கிழமை நவம்பர் 11-ம் தேதி முதல் பேரறிவாளனின் ஒரு மாத கால பரோல் தொடங்குகிறது. திங்கள் அன்று காலை இவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications