டோல்கேட் செலவு குறையும்.. எந்த ரூட்டில் கட்டணம் குறைவுன்னு நாமளே பார்க்கலாம்.. மத்திய அரசு செம முடிவு
சென்னை: மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியில் விரைவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வசதியின்படி, குறைவான சுங்கக்கட்டணம் உள்ள பாதையை வாகன ஓட்டிகளே ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்து பயணம் செய்ய முடியும். இதனால், டோல்கேட் கட்டணம் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை கடந்து செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, 'பாஸ்டேக்' முறை அமல்படுத்தப்பட்டது.

பாஸ்டேக் முறை
வாகனங்களில் 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால், சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, மின்னணு முறையில் சுங்க கட்டணம் கழித்துக்கொள்ளப்படுகிறது. கார்கள், லாரிகள், வேன்கள் என வாகனங்களுக்கு தகுந்தபடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லை சென்றால் கார்களுக்கு தோராயமாக ரூ. 600-முதல் ரூ. 700 வரை வசூலிக்கப்படும். லாரி, கனரக வாகனங்களுக்கு தகுந்தபடி இந்த கட்டணம் மாறுபடும்.
'ராஜ்மார்க் யாத்ரா' செயலி
இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையேதான், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியில் விரைவில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் படி, குறைவான சுங்கக்கட்டணம் உள்ள பாதையை வாகன ஓட்டிகள் ஒப்பிட்டு தேர்வு செய்து பயணம் செய்யலாம்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டின் கீழ் 1 லட்சத்து 46 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் வசதிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 'ராஜ்மார்க் யாத்ரா' என்ற செயலியை கடந்த 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
புதிய வசதி அறிமுகம்
இந்த ஆப் மூலம் வாகன ஓட்டிகளுக்கு நிகழ்நேர அடிப்படையில் சாலையின் நிலவரங்கள், என்னென்ன வசதிகள் இருக்கின்றன. எமெர்ஜென்சி தேவைகளை எப்படி பெறுவது.. எங்கே பெறுவது என்பது பற்றிய விவரங்களை அதில் தெரிந்து கொள்ளலாம். 'ராஜ்மார்க் யாத்ரா'யில் வாகன ஓட்டிகள் சாலையில் ஏதேனும் புகார்கள் இருந்தாலும் தெரிவிக்கலாம். புகார்கள் மீது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில்தான் தற்போது இந்த செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சுங்ககட்டணம் குறைவாக உள்ல சுங்கச்சாவடிகள் இருக்கும் ஹைவேக்கள் எது என தேர்வு செய்து பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மொத்தம் எத்தனை சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படும் என்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
சுங்க கட்டணத்தை ஒப்பிட்டு பயணிக்கலாம்
எடுத்துக்காட்டாக டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோவிற்கு யமுனை எக்ஸ்பிரஸ்வே, காசியாபாத் - அலிகார், கான்பூர் ஹைவே, மொர்தாபாதாத் - பரோலி- சிதாப்பூர் ரூட் என 3 பாதைகள் உள்ளன. இதில் எந்த ரூட்டில் எவ்வளவு சுங்க கட்டணம் என்ற விவரம் இருக்கும்.
இதனை பார்த்து தங்களுக்கு ஏற்ற ரூட்டில் வாகன ஓட்டிகள் செல்லலாம். சுங்க கட்டணத்தை ஒப்பிட்டு குறைவான கட்டணம் உள்ள ரூட் வழியாக பயணிக்க முடியும். இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ராஜ்மார்க் யாத்ரா செயலியிலெயே இந்த வசதி செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications