'மன்னித்துவிடுங்க'.. "விடியாமலேயே விடியல்".. ஸ்டாலினுக்கு எதிராக கடும் கோபத்தில் ராமதாஸ்
சென்னை:: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து இதுவரை முதல்வர் முடிவெடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, கடுமையான பதிவினை ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என்று வெளியிடப்பட்டன.. பீகார் மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 36% ஆகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 27.12%; பட்டியல் சாதி - 19.65%; இடஒதுக்கீடு இல்லாத உயர் சாதியினர் - சுமார் 15.52%, பட்டியல் பழங்குடி மக்கள் - 1.68% ஆகும். முஸ்லிம்கள் - 17.7%, கிறிஸ்தவர் - 0.05%l, பௌத்தர்கள் - 0.08%, சீக்கியர்கள் - 0.01% ஆகும்.

பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவர்களே அதிகம் இருப்பதால் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பீகார் மாநிலத்தை போல் ஒடிசாவும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளது.
ஒடிசா மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் (OSCBC) இந்த ஆண்டு மே மற்றும் ஜூலை இடையே மிகப்பெரிய கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. ஒடிசா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி ஒடிசாவில் உள்ள 4.7 கோடி மக்கள்தொகையில் 42 சதவீதம் பேர், மாநிலத்தில் உள்ள 208 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று கூறப்படுகிறது. விரைவில் முழு விவரத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.
இதேபோல் கர்நாடகாவும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. ஒராண்டிற்குள் முடித்து சாதி வாரியாக மக்கள் விவரங்களை வெளியிட முடிவு செய்துள்ளது. கர்நாடகா, பீகார், ஒடிசாவில் செய்யப்பட்டது போல் சாதி வாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்து வருகிறார். இதுவரை அரசு ஒப்புதல் தரவில்லை. இந்நிலையில் ராமதாஸ் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்"நாங்கள் அறியாமல் பிழை செய்து விட்டோம், எங்களை மன்னித்து விடும்" என்பது தான் பிகார் மாநிலத்தின் முதலமைச்சரும், கர்நாடகம், ஒதிஷா மாநிலங்களின் முதலமைச்சர்களும் தினமும் உதிர்த்துக் கொண்டிருக்கும் சொற்களாம்.
மாம்.... ஒற்றைக் கடிதத்தில் சமூகநீதியை பாதுகாப்பதை விடுத்து, கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, லட்சக்கணக்கில் அரசு ஊழியர்களை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான பக்கங்களில் அறிக்கைகளை தயாரித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறோமே? என்பது தான் அவர்களின் கவலையாம். அதானே... எல்லோரும் எங்கள் மாநில முதலமைச்சராகி விட முடியுமா..... விடியாமலேயே விடியல் தருவதற்கு?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications