சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரு புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதல்ல.. ராமதாஸ் ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: புரேவி, நிவர் புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான நிவர் மற்றும் புரேவி ஆகிய இரு புயல்களும் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றன. இதை சரி செய்ய ரூ 5264 கோடி நிதியுதவி அளிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தது.

Ramadoss demands to give more fund relief for cyclonic damages

ஆனால் மத்திய அரசோ வெறும் ரூ.286.91 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் புரெவி, நிவர் புயல் பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசின் சார்பில் ரூ.5264.38 கோரி நிதியுதவி கோரப்பட்டிருந்தது.

Ramadoss demands to give more fund relief for cyclonic damages

ஆனால், அதில் 5 விழுக்காடு மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும்!

Ramadoss demands to give more fund relief for cyclonic damages

தமிழ்நாட்டில் புரெவி, நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ.286.91 கோடி நிதியுதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்தடுத்து தாக்கிய இரு புயல்களால் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றை சரி செய்ய இந்த உதவி போதுமானதல்ல! என தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
PMK Founder Ramadoss demands to allot more fund relief for Tamilnadu in which affected by Nivar, Burevi Cyclone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X