ராமதாஸ் உயிருக்கு ஆபத்து.. காடுவெட்டி குருவை கொலை செய்தது அன்புமணி தான் என மணிகண்டன் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛காடுவெட்டி குருவை சிங்கப்பூர் சிகிச்சைக்கு செல்ல விடாமல் தடுத்து இங்கேயே வைத்து மருத்துவ கொலை செய்தது அன்புமணி ராமதாஸ் தான். ராமதாஸ் உயிருக்கு ஆபத்து இனி என்ன வேணா நடக்கலாம்'' என்று காடுவெட்டி குருவின் உறவினரும், மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனருமான விஜிகே மணிகண்டன் குற்றம்சாட்டி உள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே பிரச்சனை உள்ளது. மகன் அன்புமணி ராமதாஸ் மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். காடுவெட்டி குருவை மரியாதைக்குறைவாக அன்புமணி ராமதாஸ் நடத்தியதாக கூறியுள்ளார்.

ramadoss-life-is-in-danger-and-kaduvetti-guru-medically-homicide-by-anbumani-ramadoss-says-vgk-man

இந்நிலையில் தான் அன்புமணி ராமதாஸ் மீது மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனருமான விஜிகே மணிகண்டன் குற்றம்சாட்டி உள்ளார். விஜிகே மணிகண்டன், காடுவெட்டி குருவின் உறவினர் ஆவார். இதுதொடர்பாக விஜிகே மணிகண்டன் கூறியதாவது:

பாமகவில் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்கள். இந்த கட்சியை பல ஆண்டு காலம் பாடுபட்டு உருவாக்கியவர் ராமதாஸ். அந்த கட்சியை வழிநடத்தும் பக்குவமும், தலைமை பண்பும் அவருக்கே உரியது. இன்று அவர் அழைத்தால் லட்சம் மக்கள் அவர் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த குறுகிய காலத்தில் அன்புமணி வந்து கட்சி என்னுடையது. கட்சியை என்னிடம் கொடுத்து விட வேண்டும். ஓய்வு பெற வேண்டிய வயது வந்துவிட்டது என்று ராமதாஸிடம் கூறி சில பின்னணிகளை கூறி அவரை கைநீட்டி பேசி வன்முறையின் அருகே சென்றுவிட்டார்கள்.

அப்போது தான் ராமதாஸ், 1984ல் சங்கத்தை ஆரம்பித்து வன்னியர் மக்களுக்காக எப்படியெல்லாம் செயல்பட்டோரோ அதேபோல் செயல்பட போகிறேன் என்று கூறிவிட்டு என்னுடைய சொத்துகளும், இந்த வன்னியர் அறக்கட்டளைக்காக சம்பாதித்த சொத்துகளை இந்த மக்களுக்காக கொடுப்பேன் என்று கூறினார். என் மீது எப்போது வன்முறையை தொடங்கினாயோ அப்போதே என் சொத்தும், நான் சம்பாதித்ததையும் மக்களை மக்களுக்காக கொடுக்க போகிறேன் என்கிறார்.

அதன் மெயின் புள்ளியாக என்னனென்ன தவறான கட்டம் கட்டணுமோ அதை அன்புமணி செய்கிறார். காடுவெட்டி குரு தனது உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலை. விழுப்புரம் பொதுக்கூட்டத்தை முடித்து வரும்போது வாகனத்தில் மூச்சடைப்பு ஏற்படுகிறது. வாகனத்தை நிறுத்தி தண்ணீர் குடித்தபோது அவரது நிலை ரொம்ப மோசமாகி செல்கிறது. அந்த நிலைக்கு பிறகு மருத்துவரை தொடர்பு கொண்டு போனில் பேசி ஒரு சில சிகிச்சைகளை முடித்த பிறகு மறுநாள் காலையில் அங்கு செல்கிறார்.

அய்யா (ராமதாஸ்) எனக்கு நுரையீரல் பிரச்சனை இருக்கு. நான் ஆபரேஷன் செய்ய வேண்டும். வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று அய்யாவிடம் (ராமதாஸ்) சொல்கிறார். குரு, நீ சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெறுவதற்கு உன்னிடம் காசு இருக்கிறதா என்று அய்யா கேட்கிறார்.அப்போது கோபித்து கொண்டவர் என்னை பார்த்து இப்படி கேட்கிறீர்களே.. என்று சென்றார். ஆனால் அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்கு எல்லா வேலைகளையும் ராமதாஸ் செய்துவிட்டார்.

அன்புமணி உள்ளே வந்து நீ எதற்கு செலவு செய்ய வேண்டும். சிங்கப்பூர் போக முடியாதுனு சொல்லு. அவரை இங்கேயே தங்கவைத்து காடுவெட்டி குருவை மருத்துவ கொலை செய்தது அன்புமணி ராமதாஸ் தான். இதை வருங்காலத்தில் ராமதாஸே சொல்வார். நான் தெளிவாக சொல்கிறேன் பாருங்கள். காடுவெட்டி குருவை மருத்துவ கொலை செய்தது அன்புமணி ராமதாஸ் தான். இதை நான் இப்போது சொல்லவில்லை. மே 25ல் காடுவெட்டி குரு இறந்தார். 7 ஆண்டு ஆகிறது.

7 ஆண்டுக்கு முன்பே காடுவெட்டி குரு இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பே அவர் சொன்னார். அவர் செத்து 10 நாட்கள் ஆகிறது. மருத்துவமனையில் பூச்சாண்டி காட்டுகிறார்கள் என்று கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு போல் காடுவெட்டி குருவின் இறப்பும் மறைத்து எந்த கலவரம் வராமல் இருக்க தயார் செய்தனர். அப்போது ராமதாஸை கையை கட்டி வாயை கட்டி ஊனமாக இருக்க வைத்துவிட்டனர்.

ராமதாஸ் உயிருக்கு ஆபத்து..இனி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். காடுவெட்டி குருவுக்கே அந்த நிலைமை. ராமதாஸ் நிலை என்ன என்பதை கடவுள் தான் முடிவு செய்வார். அவரை யாரும் செய்ய முடியாது. இளமையுடன் வாழ்ந்து இப்போது முதிர்ச்சியடைந்து விட்டார். அவர் வாழும் காலத்தை நாம் முடிவு செய்ய முடியாது. இறைவன் முடிவு செய்வார்.தங்கச்சி, அக்காள், மச்சான், மாமா உள்ளிட்டவர்கள் உள்ளனர். பல கோடி கணக்கான சொத்து இருக்கிறது. அந்த சொத்துகள் யார் பெயரில் இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. ஆவணங்கள் அன்புமணியிடம் உள்ளது. அப்படி எனும் போது என்ன செய்வார்கள்? எனக்கு பாமகவை பிடிக்காது. ஆனால் ராமதாஸை ஆதரிக்கிறேன். அன்புமணியை ஆதரிக்கமாட்டேன். அன்புமணிக்கு உழைக்க தெரியாது. ராமதாஸ் உயிருக்கு அன்புமணியாலும், அவரது மனைவியாலும் ஆபத்து இருக்கிறது'' என்று குற்றம்சாட்டி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+