செளமியா அன்புமணிக்கு எதிராக.. தர்மபுரியில் 2 நாட்கள் பிரச்சாரம் செய்யும் ராமதாஸ்.. பாமகவுக்கு செக்!
சென்னை: தருமபுரி தொகுதியில் பாமக சார்பாக போட்டியிடும் செளமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் ராமதாஸ் தரப்பு வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் ராமதாஸ் தரப்பை எப்படி செளமியா அன்புமணி சமாளிப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கிறது. அதிமுக - பாமக கூட்டணிக்கு வடமாவட்டங்களில் செல்வாக்கு அதிகரித்து வரும் சூழலில், களம் இன்னும் சூடாகியிருக்கிறது. ஏனென்றால் ராமதாஸ் தரப்பு பாமக வேட்பாளர்கள் களப்பணியை தொடங்கி இருக்கின்றனர். இந்த தேர்தலில் பாமக ராமதாஸ் தரப்பில் 38 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதில் அன்புமணி தரப்பு பாமகவை எதிர்த்து நேரடியாக 12 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தருமபுரி தொகுதியில் செளமியா அன்புமணியை எதிர்த்து சரவணன் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் பாமகவின் முன்னாள் துணை பொதுச்செயலாளர். அதேபோல் சேலம் மேற்கு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ அருள், ஜெயங்கொண்டம் தொகுதியில் ரவி, செஞ்சி தொகுதியில் கனல் பெருமாள் சவால் அளிப்பார்கள் என்று தெரிகிறது.
அதேபோல் இம்முறை பாமக போட்டியிடும் 18 தொகுதிகளில் அந்த வேட்பாளர்களை தோற்கடிப்பதே ராமதாஸ் தரப்பின் நோக்கமாக உள்ளது. அதற்கேற்ப ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்ட உள்ளார். ஏப்ரல் 11ல் தொடங்கும் ராமதாஸ் பிரச்சாரம், ஏப்ரல் 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில் கும்பகோணம், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இறுதியாக தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அன்புமணிக்கு ஆதரவாக இருந்தாலும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ராமதாஸ் ஆதரவுடனே இருக்கின்றனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ராமதாஸ் ஏதோ ஒரு மேடையில் கண்கலங்க வாய்ப்புகள் உள்ளதாக உடனிருப்பவர்கள் பேசுகின்றனர்.
அது ராமதாஸ் மீது அனுதாப அலை வீசுவதற்கு காரணமாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ராமதாஸ் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை செளமியா அன்புமணியால் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே லோக்சபா தேர்தலில் செளமியா அன்புமணி தோல்வியடைந்துவிட்ட சூழலில், இம்முறை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications