ராமதாஸ் காரில் பாமக கொடியை அகற்றிவிட்டு வன்னியர் சங்க கொடி.. என்ன காரணம்? தொண்டர்கள் ஷாக்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது காரில் பொருத்தப்பட்டிருந்த பாமக கொடியை அகற்றிவிட்டு வன்னியர் சங்கத்தின் கொடியைப் பொருத்தி உள்ளார். பாமக கட்சிக்கு அன்புமணியே தலைவர் என்றும், அவரை ஏற்பவர்கள் மட்டுமே கட்சி கொடியை பயன்படுத்த முடியும் என்றும் அண்மையில் வழக்கறிஞர் பாலு தெரிவித்திருந்த நிலையில், ராமதாஸ் கொடியை மாற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வன்னியர் இட ஒதுக்கீடுக்காக உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி, தனது காரில் இருந்த பாமக கொடியை அகற்றிவிட்டு தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வன்னியர் சங்கம் கொடியை மாற்றியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்த நிலையில், அன்புமணியை கட்சியை விட்டே நீக்குவதாக அண்மையில் அறிவித்தார் ராமதாஸ். ஆனால், கட்சியில் இருந்து தன்னை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்றார் அன்புமணி.
அன்புமணி தலைமையில் தான் பாமக இயங்குகிறது என்றும், தேர்தல் ஆணையம் தங்களைத்தான் அங்கீகரித்துள்ளது என்றும் கூறி வருகிறது அன்புமணி தரப்பு. அண்மையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ஆதரவாளர் வழக்கறிஞர் கே. பாலு, பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணியே தலைவர்
மேலும், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது. பாமக தலைவராக அன்புமணியை தொடரச் செய்யும் தீர்மானத்தையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது எனத் தெரிவித்தார்.
அன்புமணியின் பாமக தலைவர் பதவிக் காலத்தை 2026 வரை நீட்டிப்பதற்கு அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. தேர்தலின் போது பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னத்தை வழங்க பரிந்துரைக்கும் அதிகாரம் அன்புமணிக்கே உண்டு. அன்புமணியை பாமக தலைவராக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே பாமக கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
காரில் கொடியை மாற்றிய ராமதாஸ்
இப்படியான சூழலில் தான், தனது காரில் இருந்த பாமக கொடியை அகற்றிவிட்டு வன்னியர் சங்கம் கொடியை மாற்றியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். வன்னியர் இட ஒதுக்கீடுக்காக உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி, அந்தத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராமதாஸ் கொடியை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணி என்ன?
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980ஆம் ஆண்டு தொடங்கி 1989ஆம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான போராட்டங்களை ராமதாஸ் நடத்தினார். அந்தப் போராட்டங்களின் ஒரு கட்டமாக 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி இதே நாளில் ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தை ராமதாஸ் தொடங்கினார். இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வன்னியர் சமூக மக்கள் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தின்போது கூட்டத்தைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி தாக்குதலில் வன்னியர்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு ராமதாஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இதைத்தொடர்ந்தே பாமக எனும் கட்சியை தொடங்கினார் ராமதாஸ். இந்த நாளை நினைவுகூரும் விதமாகவே இன்று தனது காரில் இருந்து பாமக கொடியை அகற்றிவிட்டு வன்னியர் சங்கக் கொடியை பொருத்தி இருக்கிறாராம் ராமதாஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications