பாமக இருந்தால், அங்கு விசிக இருக்காது.. திருமாவளவன் போட்ட போடு.. ராமதாஸ் கொடுத்த பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டேன் என்று திருமாவளவன் கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். அன்புமணிக்கு அறிவுரை கூறும் வகையில் திருமாவளவன் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள ராமதாஸ், ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை, முரண்பாடு, ஆதரவு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் ஒவ்வொரு நாளும் அடுத்தக்கட்ட உச்சத்தை எட்டி வருகிறது. ராமதாஸ் ஒரு பக்கம் கடைசி மூச்சு இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று கூறி வரும் சூழலில், அன்புமணி ஒவ்வொரு மாவட்டமாக பொதுக்குழுவை கூட்டி தனக்கான ஆதரவை திரட்டி வருகிறார்.

Ramadoss Responds to Thirumavalavan s Remark on PMK-BJP Alliance

அன்புமணியின் செயல்பாடு

அதுமட்டுமல்லாமல் ராமதாஸ் ஆதரவாளர்களாக இருக்கும் எம்எல்ஏ-க்கள் ஜிகே மணி மற்றும் அருள் இருவரையும் அன்புமணி கிண்டல் செய்திருக்கிறார். அவர்களின் உடல்நலம் விரைவாக குணமடைய அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம் என்று அன்புமணி கூற, அங்கிருந்த அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் சிரிக்க தொடங்கினார்கள்.

பாமக பற்றி திருமாவளவன்

பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக கூட்டணி அமைப்பதில் சிக்கல் உருவாகும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே விசிக தலைவர் திருமாவளவன், பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் இணைய மாட்டேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணிக்குள் பாமக வந்தாலும், விசிக வெளியேறும் என்பதையும் கூறி இருக்கிறார்.

ராமதாஸ் பதில்

பாமக குறித்த திருமாவளவனின் கருத்து குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ராமதாஸ், அது அவருடைய கருத்து. அவருடைய கொள்கை. அதில் கருத்து சொல்வதற்கு நான் யார்?.. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, கொள்கை, முரண்பாடு, ஈர்ப்பு உள்ளிட்டவை இருக்கும். அதனை நாம் கருத்து சொல்ல வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

திருமா மீது பாசம்

அண்மையில் தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த ராமதாஸ், நானும் திருமாவளவனும் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருந்தோம், இருக்கிறோம், இருப்போம். பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை ஊர்த்தெருவின் வழியே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட போது, தடையை மீறி அந்த சடலத்தை தோளில் சுமந்து சென்றேன். அதற்காக தமிழ்க்குடி தாங்கி என்ற பட்டம் கொடுத்து பாராட்டியவர் ராமதாஸ்.

திருமாவின் திருமணம்

அன்புமணி அவரின் தந்தையை கலங்க விடக்கூடாது.. அவரின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியது மகிழ்ச்சி அளித்தது. அதேபோல் திருமாவளவன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது தனிப்பட்ட முறையில் தனக்கு வருத்தம் அளிக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+