தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும். பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்திய தேர்தல் ஆணையமும் சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அடுத்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தமிழகம் வருகை தர உள்ளார்.

ராமதாஸ் மனு
அதன்பிறகு தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும். அநேகமாக மார்ச் முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தான் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க..
அதில், ‛‛தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும். பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டால் மாம்பழம் சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது'' என்று கூறியுள்ளார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுத்தாக்கலின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது தற்போது பாமக இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
பின்னணி என்ன?
ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றன. அன்புமணி ராமதாஸ் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ளார். ராமதாஸ் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும் இருவரும் நாங்கள் தான் உண்மையான பாமக என்று கூறி வந்தனர். இதற்கிடையே தான் அன்புமணி ராமதாஸ் தான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமகவின் சின்னமான மாம்பழம் அவருக்கு ஒதுக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
தேர்தல் ஆணையம் சொன்ன பதில்
அந்த வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணையம் சார்பில் தங்களிடம் உள்ள ஆவணங்களின்படி அன்புமணி தான் பாமகவின் தலைவர். அன்புமணி ராமதாஸ்க்கு எதிராக சிவில் நீதிமன்ற உத்தரவு வந்தால் மட்டுமே ஆவணங்களை மாற்ற முடியும்'' என்று விளக்கமும் அளித்தது.
இது ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பாமகதலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தள்ளிவைக்க வேண்டும் என்று ராமதாஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications