திடீர் ட்விஸ்ட்.. பாமக மாம்பழம் சின்ன வழக்கை ஐகோர்ட்டில் தாமாக முன்வந்து வாபஸ் பெற்ற ராமதாஸ்!
சென்னை: பாமகவிம் மாம்பழம் சின்னம் மற்றும் கட்சி பெயரை அன்புமணி பயன்படுத்த தடைவிதிக்க கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்பப்பெற அவரே விருப்பம் தெரிவித்ததையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் - அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக, பாமக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான கடிதத்தை யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பாமக தலைவர் என குறிப்பிட்டு அக்கட்சியின் தி.நகர் அலுவலகத்துக்கு அனுப்பியது.

இதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண இருதரப்புக்கும் உத்தரவிட்டது. இதையடுத்து, பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக் கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு பிப்ரவரி 25ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமதாஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவின்படி, பாமகவின் தலைவராக ராமதாஸ் தான் உள்ளார். எனவே அன்புமணி ராமதாஸ் தலைவர் என்று கூற தடை விதிக்க வேண்டும். மேலும், மாம்பழம் சின்னத்தையும், பாமக பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தவும் அன்புமணிக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ராமதாஸ் தரப்பு கோரிக்கைக்கு பதில் அளிக்க, அன்புமணி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. எனவே இந்த வழக்கில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கானது நிலுவையில் உள்ளது. உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெற ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், வழக்கை திரும்பப்பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications