அரசு ஊழியர்களுக்காக ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ராமதாஸ்.. அன்புமணி அப்படி சொல்கிறார்.. 2026 கதை மாறுதே
சென்னை: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சருக்கு நன்றி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மறுபக்கம் அன்புமணி ராமதாஸ், + இந்தத் திட்டம் தமிழக அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட மோசடித் திட்டம் என்று குற்றச்சாட்டி உள்ளார். இந்த இரு அறிக்கைகளை பார்க்கும் போது, திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் ராமதாஸ் இருப்பது தெரிகிறது. இந்த முறை திமுக கூட்டணியில் ராமதாஸ் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பை தொண்டர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "பழைய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து கடந்த 1.4.2003 முதல் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. அதேசமயம் இதனை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். மேலும் வருகிற ஆறாம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்ச மு.க.ஸ்டாலின் இன்று, " தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்" எனும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் காக்கும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது வரவேற்கக்கூடியதே. குறிப்பாக மாநில அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறும் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பதையும், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியும் வழங்கப்படும் என்பதையும் அரசு ஊழியர்கள் வரவேற்று மகிழ்கின்றனர். தமிழ்நாடு அரசில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் சார்பில் இதனை நானும் வரவேற்கிறேன்.
அதேசமயம் நிதிக்குழு பரிந்துரையின்படி ஊதியம் உயர்த்தப்படுவதைப் போல ஓய்வூதியமும் உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் நிதிக்குழு அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பலன் பெற முடியும். இதனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்தில் கொண்டு வருகிற சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல் கல்வித்துறை, வேளாண்மை துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள், காலமுறை ஊதியர்கள், தொகுப்பூதியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பையும் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அரசு துறைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் சமமானவர்கள், சமவேலைக்கு சமஊதியம் பெறுபவர்கள் என்கிற சமத்துவ, சமூகநீதி உறுதிப்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, விடுபட்ட கோரிக்கைகள் நிறைவேற்றவும், நிரந்தர பணியில் இல்லாத ஊழியர்கள் அனைவரின் நலன் காக்கும் அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்ப்படும் என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. கவர்ச்சி முலாம் பூசப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் தமிழக அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட மோசடித் திட்டம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் 2002 & 03ஆம் ஆண்டுடன் ரத்து செய்யப் பட்டு, 2004 ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சி, அதை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று 23 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக 2021&ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறேன்.
இத்தகைய சூழலில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாறாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஓட்டைகள் நிறைந்தத் திட்டத்தை திமுக அரசு அறிவித்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கில் தான் இந்த அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது என்பதை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து அறிய முடிகிறது.
பழைய ஓய்வூதியத்துடன் ஓப்பிடும் போது தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் மிகவும் குறைவு; பாதிப்புகள் மிகவும் அதிகம் ஆகும். திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பல அம்சங்கள் தெளிவற்று உள்ளன. அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்குடன் தான் இத்தகைய தெளிவற்றை அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலம் எவ்வளவு? என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை. மாறியிருக்கும் இன்றைய சூழலில் ஒருவர் அரசு பணியில் சேருவதற்கு 30 வயதிற்கும் மேலாகும் நிலையில், அவர்கள் 30 ஆண்டுகள் பணி செய்வது என்பது சாத்தியமற்றது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தப்பட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று என்று திமுக அரசு அறிவித்துள்ளது. அதன் அளவு குறித்து எந்த விளக்கமும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
வழக்கமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 30 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு முழு ஓய்வூதியமும், 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தவர்களுக்கு கால அளவிற்கு ஏற்ற வகையிலும் ஓய்வூதியம் வழங்கப் பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டப்படி 30 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்பதும், அதன் அளவை குறிப்பிடாததும் பெரும் அநீதி.
அதேபோல், 2003 & ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பணியில் சேர்ந்து, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அளவு எவ்வளவு? என்பதும் அறிவிக்கப்படவில்லை. அவர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்காமல் கருணை ஓய்வூதியம் வழங்குவதாக அறிவிப்பது அவர்களை ஏமாற்றுவது மட்டுமின்றி சிறுமைப்படுத்தும் செயலும் ஆகும்.
இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் எந்த தேதியிலிருந்து செயல்படுத்தப்படும் என்பது குறித்து அரசின் அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஓய்வூதிய நிதியத்திற்கு அரசு ரூ.13,000 கோடி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. அந்தத் தொகையை, இன்னும் 45 நாள்களில் முடங்கவிருக்கும் திமுக அரசு, எப்போது, எப்படி செலுத்தும்? என்பது தொடர்பாக எந்த விளக்கமும் திமுக அரசின் சார்பில் வெளியிடப்படவில்லை.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்படும் போது தான் தெளிவாகத் தெரியும். அத்தகைய அரசாணை வெளியாகும் போது அரசு ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய அரசு ஊழியர்கள் அமைப்பின் தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, இது குறித்த அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, முழு ஓய்வூதியம் பெறுவதற்கான 30 ஆண்டுகள் பணி செய்ய வாய்ப்பில்லாதவர்களும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகக் கூறி இந்தத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள்; அதனடிப்படையில் இத்திட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கக் கூடும் என்று கூறியுள்ள அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர்கள், அப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் ஓட்டைகள் நிறைந்த இத்திட்டத்தை அரசு அறிவித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திமுக அரசு நினைத்திருந்தால் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், 56 மாதங்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாத திமுக அரசு, பதவிக்காலம் முடிவடைவதற்கு 56 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறது என்றால் அதன் பின்னணியில் இருப்பது சதி மட்டும் தான்.
இப்படி ஒரு திட்டத்தை நாங்கள் அறிவித்திருக்கிறோம்; நாங்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறி வாக்குகளை வாங்குவதற்காகத் தான் இப்படி ஒரு ஏமாற்று வேலையை திமுக அரசு செய்கிறது. இதை நம்பி அரசு ஊழியர்கள் ஏமாந்து விடக் கூடாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு அமைக்கப்படும் போது பழைய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதை பாமக உறுதி செய்யும்" இவ்வாறு கூறியுள்ளார்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியஇருவரின் அறிக்கையை பார்க்கும் போது, ராமதாஸ் திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதும், அன்புமணி அதிமுக அல்லது தவெக நிலைப்பாட்டில் இருப்பது பார்த்தாலே புரியும், அன்புமணியை பொறுத்தவரை விமர்சிக்கும் முறைகளை பார்க்கும் போது, திமுக உடன் சேர வாய்ப்பு இல்லை என்பது மட்டும் தெரிகிறது. அதேபோல் ராமதாஸ் அண்மை காலத்தில் திமுக உடன் நட்பு பாராட்டுவதுபோல் தெரிகிறது. எனவே கூட்டணி கணக்குகள் எப்படி மாறும்.. என்ன நடக்கும் என்பதை இன்னும் சில நாளில் தெரிந்துவிடும்.
-
ஸ்டாலினுக்கு போன் அடித்த ராகுல்.. அப்ப எல்லாமே தப்பா.. செல்வப்பெருந்தகை அப்டேட் -
அரசியல் முட்டு சந்தில் ராமதாஸ்.. அதிமுகவுடன் கூட்டணியா? கேட்டை மூடிய எடப்பாடி.. அடிவருடிகள் அப்செட்! -
மகளிர் உரிமைத் தொகை.. திட்டத்தை அறிவித்த திருச்சியில் நின்று மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
ஆளுநர் ரவியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! மே.வங்கத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் திடீர் மீட்டிங் -
"திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த ஆளுநர் ரவியை மாத்திட்டாங்களே..” முதல்வர் ஸ்டாலின் கிண்டல்! -
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
தேர்தல் முடிந்ததும் அதிமுக பாஜக கண்ட்ரோலுக்கு போயிவிடும்.. நிதிஷ் நிலமைதான் எடப்பாடிக்கு.. ஸ்டாலின்








Click it and Unblock the Notifications