சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா... ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் தோழர்களே.. இதெல்லாம் என்ன? ராமதாஸ் கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: கேரளத்தில் 25,000 காவலர்களின் வாக்குகளை சட்டவிரோதமாக ஆளும் கட்சி போட்டுக்கொண்டது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவில் கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது கேரள போலீசாரின் தபால் ஓட்டுக்களை ஆளும் கட்சியினர் சட்டவிரோதமாக பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது.

Ramadoss twitted about Kerala govt fraudulent on postal vote of police

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கேரள போலீசாரின் தபால் ஓட்டுக்களை மொத்தமாக வாங்கி அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு போலீஸ் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு அனுப்பி வைத்ததும் அந்த தபால் ஓட்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதும் உண்மைதான் என தெரியவந்தது.

மமதா மேற்குவங்கத்தின் பெண் புலி... சந்திரபாபு நாயுடு புகழாரம் மமதா மேற்குவங்கத்தின் பெண் புலி... சந்திரபாபு நாயுடு புகழாரம்

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 'கேரளத்தில் 25,000 காவலர்களின் வாக்குகளை சட்டவிரோதமாக பறித்து தங்களுக்கு பதிவிட்டுக் கொண்ட மார்க்சிஸ்ட் கூட்டணி: செய்தி - ஆஹா... ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் தோழர்கள் தங்கள் கோட்டையை தற்காத்துக் கொள்ள செய்வதெல்லாம் முறைகேடுகள் தானா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
PMK founder Ramadoss twitted about Kerala govt fraudulent on postal vote of police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X