திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி.. பிரச்சனையை தூண்டுகிறார் நவாஸ் கனி.. கொந்தளிக்கும் அண்ணாமலை!
சென்னை: திருப்பரங்குன்றம் மலை மீது அமர்ந்து பிரியாணி சாப்பிடுவதன் மூலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி முயற்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். நவாஸ் கனியின் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள அண்ணாமலை, இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் கடந்த சில மாதங்களாக கந்தூரி கொடுக்க தடை காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி போன்ற உயிர்ப்பலி கொடுக்க கூடாது என்று இந்து முன்னணி போன்ற இந்து அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர்.

இதனால் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஆய்வு நடத்தினார். அதேபோல் திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டார். இந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பாஜக தலைவர்கள், இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். இந்துக்கள் மனதை புண்படும் வகையில் நவாஸ் கனியின் செயல்பாடுகள் உள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடுவது போன்ற செயல்கள் மூலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவரின் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை சம்பவம் தொடர்பான கேள்விக்கு, சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக கணிம வளங்கள் திருடப்படுவது தெரிய வந்துள்ளது. லாரியால் மோதிவிட்டு, பின்னர் மீண்டும் பின் சென்று 2, 3 முறை மீண்டும் லாரியால் ஏற்றியுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி உள்ளதை வரவேற்கிறேன். இதை சாதாரண சாலை விபத்து வழக்காக பார்க்காமல் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து டங்ஸ்டன் விவகாரம் தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு, டங்கஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்று டங்கஸ்டன் சுரங்கம் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். பிரதமர் மோடி தமிழ் நாடு மக்களுடன் எப்போதும் நிற்பார் என்று தெரிவித்தார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications