பிறை தென்பட்டது.. ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் பிறை தென்பட்டதால் ரம்ஜான் பண்டிகை இன்று (10 ஆம் தேதி) கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு இருத்தல் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதம் பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டு தொழுகை, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உள்ளது.
பகலில் உணவு, தண்ணீர் ஏதும் இன்றி மாலையில் இப்தார் உணவுடன் நோன்பை துறப்பது வழக்கம். சூரியன் மறையும் வரை இவர்கள் நோன்பை கடைப்பிடிப்பார்கள். நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு அதாவது முடிக்கும் நேரத்தில் இப்தார் என்றும் அந்த உணவு அழைக்கப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகை: அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் மார்ச் 12 ஆம் தேதிதான் பிறை தெரிந்தது. இதனால்தான் ரமலான் மாதம் அன்று தொடங்கப்பட்டது. சுமார் 30 நாட்கள் விரதமிருந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
அரசு தலைமை காஜி: அந்த வகையில் இன்று பிறை தெரிந்தால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தமிழகம், புதுவையில் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்து இருந்தார்.
பிறை தென்பட்டது: ஆனால், தமிழகத்தில் பிறை தென்பட்டதாகவும் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 10 (இன்று) கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஏற்கனவே பிறை தென்படவில்லை என்று அறிவிப்பு செய்திருந்தோம்.
இந்த நிலையில் கோவை - சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக செய்தி வந்தது. அதை சற்று முன் விசாரித்து உண்மை என்று உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்கண்டவாறு பிறை அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிடுகிறது.
நோன்பு பெருநாள்: பிறை தேட வேண்டிய நாளான 09. 04. 2024 செவ்வாய்க் கிழமையன்று தமிழகத்தின் கோவை - சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி - வேர்கிளம்பி பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 09. 04. 2024 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகிறது என்பதையும் 10. 04. 2024 புதன்கிழமை நோன்பு பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications