என்ன ஹேக்கிங்கா? 24 மணி நேரத்தில் மீண்டும் முடக்கப்பட்ட ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா.. என்னாச்சு?
சென்னை: முடக்கத்தில் இருந்து மீண்டு வந்த சாணக்யா யூ டியூப் சேனல் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. யூ டியூப் நிறுவனம் இந்த சேனலை முடக்கியதாக தகவல்கள் வருகின்றன.
செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே மூலம் நடத்தப்பட்டு வரும் யூ டியூப் சேனல் சாணக்யா டிவி. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சாணக்யா டிவியின் யூ டியூப் பக்கம் செயல் இழந்தது.
சேனலின் முகப்பு பகுதியில், சாணக்யா டிவி சேனல் யூ டியூப் மூலம் முடக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இது இணையம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியது.

என்ன ஆனது?
இது குறித்து சேனல் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே செய்திருந்த ட்வீட்டில், உங்கள் எல்லோரின் ஆதரவோடு நாங்கள் தீவிரமாக வளர்ந்து வருகிறோம். சாணக்யா யூ டியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளதே எங்களின் வளர்ச்சிக்கு சிறந்த உதாரணம். யூடியூப்பில் புகார் செய்துள்ளோம். http://chanakyaa.in, Facebook & twitter போன்ற அனைத்து தளங்களும் சீராக உள்ளன. இறைவனின் கிருபையால் எங்கள் சேவைகளை தொடர்ந்து செய்வோம், என்று குறிப்பிட்டு இருந்தார்.

நெட்டிசன்கள் கருத்து
இந்த நிலையில் சாணக்யா சேனல் ஹேக் செய்யப்பட்டதாக கூறிய ரங்கராஜ் பாண்டேவுக்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். உங்கள் சேனலை யாரும் ஹேக் செய்யவில்லை. அது முடக்கப்பட்டு இருக்கிறது. அதை யூ டியூபே தெளிவாக உங்கள் பக்கத்தில் சொல்லி இருக்கிறது.

யூ டியூப்தான் செய்தது
யூ டியூப் விதிமுறைகளை மீறி உள்ளீர்கள். அதனால் உங்கள் சேனல் யூ டியூப் மூலம் முடக்கப்பட்டுள்ளது. அவர்களின் விதிகளை பின்பற்றி விளக்கம் கொடுத்தால் உங்கள் சேனல் மீண்டும் கிடைக்கும். சர்ச்சைக்குரிய வீடியோக்களை நீங்கள் நீக்க வேண்டும். உங்கள் சேனலை யாரும் ஹேக் செய்யவில்லை என்று நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

மீண்டு வந்தது
இதையடுத்து மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த சேனல்.. தற்போது மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. யூ டியூப் விதிமுறைகளை மீறியதால் மீண்டும் சேனல் முடக்கப்பட்டுள்ளது. நீங்கள் யூ டியூப் கம்யூனிட்டி விதிகளை மீறிவிட்டீர்கள். அதனால் உங்கள் சேனல் முடக்கப்படுகிறது என்று யூ டியூப் இந்தியா சாணக்கியா சேனலில் குறிப்பிட்டுள்ளது.

மீண்டும் முடக்கம்
48 மணி நேரத்துக்கு முன்னாடி இருந்த அதே நிலை. சாணக்யா பக்கத்தை மீண்டும் Hackகி இருக்கிறார்கள். முறையீடு செய்திருக்கிறோம். இறைவன் கருணை, உங்கள் அன்பால் மீண்டு(ம்) வருவோம். மற்றவை வழக்கம் போல், என்று ரங்கராஜ் பாண்டே இது குறிப்பிட்டுள்ளார். சாணக்யா சேனல் யூ டியூப் மூலம் முடக்கப்பட்ட நிலையில் இதை ஹேக்கிங் என்று ரங்கராஜ் பாண்டே மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications