ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் வாக்களித்த ராசாத்தி கருணாநிதி ஒருமுறை வாக்களிக்க வேண்டுமா அல்லது இரண்டு முறை வாக்களிக்க வேண்டுமா என கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணியிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை பிரபல அரசியல் கட்சித் தலைவர்களும் நடிகர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தி வருவதோடு அவற்றை சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியிட்டு வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ,உள்ளிட்ட பலரும், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார், சிவகார்த்திகேயன், டி.ராஜேந்தர், திரிஷா உள்ளிட்ட சினிமா துறை சார்ந்த பிரபலங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியாரும் திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழியின் தாயாரான ராசாத்தி கருணாநிதி வாக்களித்தார். வாக்குச்சாவடியில் வாக்காளர்களுடன் சிறிது நேரம் காத்திருந்த அவர் பின்பு தனது வாக்கினை பதிவு செய்தார்.
தொடர்ந்து அங்கிருந்து வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி அதிகாரிகளை பார்த்து 'ஒரு ஓட்டு தான் போட வேண்டுமா.. அல்லது இன்னொரு ஓட்டும் போட வேண்டுமா' எனக் கேட்டார். அதற்கு அதிகாரிகள் ஒரே ஒரு ஓட்டு மட்டும் போட்டால் போதும் எனக் கூறியதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார் . நாடாளுமன்ற தேர்தலோடு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் நிலையில் சென்னையிலும் அது போல நடக்கலாம் என்ற எண்ணத்தில் ராசாத்தி கருணாநிதி அப்படி கேட்டு இருக்கலாம் என அவருடன் வந்தவர்கள் கூறினர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications