குடும்ப அட்டைதாரர்களுக்கு.. 2 மகிழ்ச்சி செய்தி.. அதுவும் நாளைக்கே.. சென்னைவாசிகளே இது ரொம்ப மேஜர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 விதமான மகிழ்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..

Ration Holders: tamilnadu government announcement and pds special camp for ration card holders

ரேஷன் அரிசி: ஆனால், ரேஷன் அரிசி கடத்தல் விஸ்வரூபமெடுத்துள்ளது.. எனவேதான், ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறைந்துள்ளதே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக தேனி மாவட்டம் குமுளி, கம்பம், மொட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடந்தவாரம்கூட செய்திகள் வந்திருந்தன..

இப்படி அரிசி கடத்தலால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. இந்நிலையில்தான், 2 விதமான செய்திகள் வெளியாகி உள்ளன..

அதிரடிகள்: தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட கக்கன்ஜி காலனியில் ரஃபீக் என்பவருக்குச் சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இங்கு ரேஷனில் வழங்கப்படும் அரிசியை வாங்கி அதனை குருணையாக அரைத்து தீவனத்திற்காக விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் அந்த அரிசி ஆலையில் சோதனை நடத்தினர். அப்போது தீவனத்திற்காக அரைக்கப்பட்ட 1850 கிலோ குருணை அரிசி மூட்டைகளாக சிக்கியது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த அரிசி ஆலைக்கு சீல் வைத்துவிட்டார்கள்.. இந்த அதிரடியால் தேனி மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்கள்: அதேபோல, பொதுமக்களின் குறைகள் தீர்க்க மற்றுமொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. ரேஷன் அட்டைதார்கள், https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று உரிய விவரங்களை அளித்து கட்டணம் செலுத்தி, குடும்ப அட்டைகளை பெற முடியும்... இதையடுத்து குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள மக்கள் குறைதீர் முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை மண்டலத்தில், முகாம் குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Ration Holders: tamilnadu government announcement and pds special camp for ration card holders

ரேஷன் கடைகள்: அந்த அறிவிப்பில், "பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜுன் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும் 10.06.2023 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருட்களை பெற நேரில் வருகை தர முடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவிக்கலாம்.

குடும்ப அட்டைதாரர்கள்: ஒட்டுமொத்தமாக குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சேவை அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக நடத்தப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+