அரிசி அட்டைதாரர்களே.. ரேஷன் கடை ஊழியர்கள் இதற்கு உங்களை கட்டாயப்படுத்துகிறார்களா? இதை பாருங்க
சென்னை: அரிசி அட்டைதாரர்களே ரேஷன் கடை ஊழியர்கள் உங்களை பிற பொருட்கள் வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்களா? பிற பொருட்கள் வாங்காவிட்டால் பொருள் தரமுடியாது என்று உங்களை மிரட்டுகிறார்களா? இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் வெறும் அரிசி பருப்பு விநியோகிக்கும் இடம் என்பதை தாண்டி, வாழ்வாதாரத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டில் விற்கப்படும் அரிசி விலை இப்போது கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாக இருக்கிறது. இப்படியான சூழலில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை வாங்காமல் போனால் சாமானிய குடும்பங்கள் மட்டுமல்ல, நடுத்தர குடும்பங்களே நிச்சயம் பரிதவித்து போய்விடும்.

அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்களின் அட்சய பாத்திரமாக திகழும் ரேஷன் கடைகளில் கோடிக்கணக்கான மக்கள் சரியான முறையில் தங்களுக்கான அரிசி பருப்பு முதல், உதவி தொகை வரை அனைத்தையும் பெறுகிறார்கள். அண்மையில் வெள்ளம் வந்த போது, ரேஷன் கடைகள் தான் மக்களுக்கு கைகொடுத்தன.
தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இந்த அட்டைகளுக்கு உணவு பொருட்கள் நியாய நிலையில் வழங்க 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் உள்ளது. தமிழ்நாட்டில் பேருந்துகள் போக முடியாத மலை கிராமங்களில் கூட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகள் மூலம் தமிழ்நாட்டில் 7 கோடியே 52 ஆயிரத்து 847 பேர் உணவு பொருட்கள் பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் தற்போது 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உணவு பொருட்களை தமிழ்நாட்டில் எந்த ஊரில் உள்ளவர்களும் எந்த ஊரிலும் போய் எளிதாக வாங்கி கொள்ள முடிகிறது. ரேஷன் பொருட்களை வாங்க உங்கள் கைரேகை பதிவு மட்டும் போதும், நீங்கள் நீலகிரியில் இருந்தாலும், சென்னையில் இருந்தாலும் சரி, பொருட்களை வாங்கி கொள்ள முடியும். நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும், ரேஷன் கடைகளில் ஏற்கனவே கைரேகை பதிவு செய்து வைத்திருந்தால், தமிழ்நாட்டின் எந்த ரேஷன் கடைகளிலும் உங்களுக்கு வேண்டிய பொருட்களை எளிதாக பெறலாம்.
இதெல்லாம் நவீனம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களால் நடந்தவை.. ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கவே இந்த கைரேகை முறையில் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. அதேபோல் புலம் பெயர்ந்து வாழ்வோருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரிசி அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு பொருள் வாங்க போனால், பிற பொருட்களை வாங்கினால் தான் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் தருவோம் என்று சில ஊழியர்கள் கட்டாயப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது.. 100 ரூபாய் அல்லது குறைந்தது 50 ரூபாய்க்கு மேல் ஏதாவது ஒரு பொருள் வாங்க சொல்லி கட்டாயப்படுத்துவது நடக்கிறது. குறிப்பாக வெளியூர் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் நீங்களாக விருப்பப்பட்டு பொருட்களை வாங்கலாம்.
ஆனால் உங்களை ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்தினால் வாங்காதீர்கள்.. மாறாக கடை ஊழியர் குறித்து தாராளமாக புகார் அளிக்கலாம். ரேஷன் கடை எண், ரேஷன் கடை ஊழியர் பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் தெளிவாக பெரிய போர்டே வைக்கப்பட்டிருக்கும். தாசில்தார், வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் வரை பல போன் நபர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் புகார் தெரிவிக்கலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications