ரேஷன் பொருள் வீடுகளுக்கே சென்று விநியோகம்.. முதல்வருக்கு ரேஷன் கடை ஊழியர்கள் வைத்த கோரிக்கை
சென்னை: தாயுமானவர் திட்ட விநியோகத்துக்கு ஒவ்வொரு மாதமும் 2-வது சனி, ஞாயிறு மற்றும் அடுத்து வரும் திங்கட்கிழமையை நிரந்தர நாட்களாக செயல்படுத்தி அறிவிப்பு வெளியிட வேண்டும். பிரதிநிதி மூலம் பொருட்கள் வழங்குவதற்கும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, தாயுமானவர் திட்ட விநியோக நாட்களில் 'பிராக்ஸி' முறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரம் ரேஷன் கடை ஊழியர்கள் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அதன்படி, பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான வாடகை (வண்டி வாடகை) மற்றும் ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி ஆகியவை முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால் பணியாளர்களே தங்கள் கைக்காசை செலவிடும் நிலை ஏற்படுகிறது. இந்தப் பணிக்காக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை பணியாளர்களுக்கு இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.

4G சர்வர் மற்றும் POS Machines அடிக்கடி பழுதாவதால், கைரேகை மற்றும் கருவிழி சரிபார்ப்பில் பெரும் தாமதம் ஏற்படுகிறது. பணியாளர்கள் தங்கள் சொந்த செல்போன் டேட்டாவைப் பயன்படுத்தி வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறுகையில், "தாயுமானவர் திட்ட விநியோகத்துக்கு ஒவ்வொரு மாதமும் 2-வது சனி, ஞாயிறு மற்றும் அடுத்து வரும் திங்கட்கிழமையை நிரந்தர நாட்களாக செயல்படுத்தி அறிவிப்பு வெளியிட வேண்டும்.
பிரதிநிதி மூலம் பொருட்கள் வழங்குவதற்கும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, தாயுமானவர் திட்ட விநியோக நாட்களில் 'பிராக்ஸி' (Proxy) முறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலக்குறைவுடன் காணப்படும் பணியாளர்களுக்கு தாயுமானவர் திட்ட விநியோகத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தாயுமானவர் திட்டம் செயல்படும் நாட்களுக்கு மட்டும் 'ப்ளூடூத்' முறையை ரத்து செய்ய வேண்டும். தாயுமானவர் திட்டத்துக்கான வண்டி வாடகை, ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி, ஊக்கத்தொகையை உடனடியாக வழங்குவதோடு, அன்றாட கூலி அடிப்படையில் உதவியாளர் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
ரேஷன் கடை பணியாளர்களின் செல்போன் 'ஹாட் ஸ்பாட்' மூலம் விற்பனை முனை கருவி (பி.ஓ.எஸ்.) இயங்குகிறது என தெரிவித்து 'ஓய்சிஸ்' (OASIS) நிறுவனத்தின் தரவுகளை மேம்படுத்த தக்க உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications