பொங்கல் பரிசு போல் ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு.. தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் பொங்கலுக்கு மட்டுமே பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி, சர்க்கரை, மைதா, கடலை மாவு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், ரவை, மல்லி, மிளகாய் வத்தல், சீரகம், மிளகு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பாக தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம் ஆகும். வேஷ்டி, சேலை, பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ரொக்க பணமும் அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூபாய் ஆயிரம் ரொக்கம். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் ரொக்க பணத்துடனே பொங்கல் பரிசு வழங்கபட்டது.

இந்நிலையில் பொங்கலுக்கு வழங்குவது போல், ரேஷன் கடைகளில் தீபாவளிக்கும் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டம், அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்..
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு துயரார்ந்த அஞ்சலியும், வீர வணக்கமும் செலுத்தப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி, சர்க்கரை, மைதா, கடலை மாவு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், ரவை, மல்லி, மிளகாய் வத்தல், சீரகம், மிளகு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பாக தமிழக அரசு வழங்கிட வேண்டும்.
திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதி மரணம் அடைந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற கண்காணிப்பில் மறு உடற்கூறாய்வு செய்து நீதி விசாரணை நடத்திட வேண்டும்." இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications