சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ரேஷனில் இனிப்பு செய்தி.. ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்.. தமிழக அரசு சபாஷ்
சென்னை: ரேஷன்தாரர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் ஏராளமான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில், தற்போதுகூட ஒரு புதிய உத்தரவை கூட்டுறவு சங்கம் பிறப்பித்திருக்கிறது.. இந்த அதிரடியானது, சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
தமிழகத்தில், மலிவு விலையில், ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரேஷன் பொருட்களளால் கோடிக்கணக்கான மக்கள் பலன் பெற்று வருகிறார்கள்.. அதேபோல, பொங்கல் தொகுப்பு, பரிசு பொருட்கள், நிவாரணத்தொகை உள்ளிட்டவையும் அந்தந்த காலகட்டங்களில் அரசு வழங்கி வருகிறது.

ரேஷன் பொருட்கள்
இதைத்தவிர, அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படும் ரேஷன் பொருட்களையும் போலீஸார் கட்டுப்படுத்தி வருகிறார்கள்.. அதேபோல, ரேஷன்தாரர்களின் புகார்கள், குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, முகாம்களை மாத மாதம் அரசு நடத்தி வருகிறது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை துாய்மையாகவும், சுகாதாரமாக எப்படி பராமரிக்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள்.. ரேஷன்வாங்க வரும் மக்களை நீண்ட நேர காக்க வைக்க கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
புதிய வெப்சைட் துவக்கம்
நேற்றுகூட, ஒரு புதிய வெப்சைட் துவங்கப்பட்டுள்ளது.. அதாவது, மூத்த குடிமக்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், ரேஷன் கடைக்கு செல்ல சிரமப்படுவதால், தங்களின் சார்பில் வேறு நபரை கடைக்கு அனுப்பி, பொருட்களை வாங்கி கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதற்கு, உணவு வழங்கல் துறை அலுவலகங்களில், அங்கீகார சான்று விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து தர வேண்டும் என்பது அடிப்படையான விதியாகும்.
ஆனால், அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வதாக புகார் கிளம்பியது.. அதனால்தான் "www.tnpds.gov.in" என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கும் வசதியை, உணவு துறை புதிதாக துவக்கியிருக்கிறது.
மின்னணு எடை தராசு
இந்நிலையில். ரேஷன் கடைகளில் எடை குறைவாக உணவு தானியங்கள் வழங்குவதை தடுப்பதற்காகவே, மின்னணு எடை தராசானது, வைஃபை, புளூடூத் வாயிலாக, பிஓஎஸ் கருவியுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஊழியர்கள், தராசில் எவ்வளவு பொருளை வைக்கிறாரோ, அந்த எடைதான் கருவியில் பதிவு செய்யப்படும். எனவே, மின்னணு எடை தராசுகளை, பிஓஎஸ் கருவியுடன் ஒருங்கிணைக்கும் பணிகளை முடிக்க காலக்கெடு நிர்ணயித்து, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டிருக்கிறார்.
மகிழ்ச்சி - நம்பிக்கை
அதன்படி, திருப்பத்துார், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, சென்னை வடக்கு, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில், வரும் 30ம் தேதிக்குள் ஒருங்கிணைக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, விருதுநகர், நாமக்கல், சிவகங்கை, துாத்துக்குடி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், சென்னை தெற்கு, வேலுார், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கரூர் மாவட்டங்களில் அடுத்த மாதம் 5ம் தேதிக்குள்ளும், மற்ற மாவட்டங்களில் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள்ளும் முடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.. தமிழக அரசின் இந்த அடுத்தடுத்த நடவடிக்கையானது, ரேஷன்தாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications