ரேஷன் அட்டைதாரர்களே.. இந்த மாசம் ரேஷன் வாங்கிட்டீங்களா? இன்று முதல் ரேசன் பொருட்களுக்கு பெரிய சிக்கல்
சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி வெளிவந்துள்ளது.. ரேஷன் கடை ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவினால், பரபரப்பு ஏற்பட் டு வருகிறது.. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர் சொல்வது என்ன?
ரேஷன் கடை ஊழியர்கள், நீண்ட நாட்களாகவே சில முக்கிய பிரச்சனைகளை வைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.. அவைகளை அமல்படுத்தி வேண்டும் என்று கோரியும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், தமிழக அரசு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
விற்பனை பதிவுமுறை: அத்துடன், அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார்கள்..
மேலும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகிறார்கள்..
முக்கியமாக, ரேஷன் கடைகளை பொதுவிநியோக திட்டத்தின் ஒரே துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து வருகிறார்கள்..
என்ன காரணம்: ஏன் என்றால், கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகள், வருவாய்த்துறை நிர்வாகத்திலும், டிஎன்சிஎஸ் நிர்வாகத்திலும், கூட்டுறவு துறை நிர்வாகத்திலும் சேர்ந்து பார்க்கப்படுகிறது.. இதனால், நடைமுறை சிக்கல்ள் நிறைய ஏற்படுவதாகவும், இவைகளை களைய வேண்டும் என்றால், பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், என்பதே ரேஷன் கடை ஊழியர்களின் கருத்தாக உள்ளது.
இவைகளை எல்லாம் மனதில் வைத்தே, தொடர்ச்சியான போராட்டங்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும், ரேஷன் கடை ஊழியர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.. எனினும் இவைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காததால், மீண்டும் ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளனர்..
போராட்டங்கள்: ஆனால், இந்த போராட்டத்தை காலவரையற்று நடத்தப்போவதாகவும், அதுவும் இன்று முதல் அதாவது ஜூன் 14 முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த போவதாகவும் முடிவு செய்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில், முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன...

இதுகுறித்து, அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியும் தந்திருக்கிறார். அப்போது, "தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் 3 துறைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் 3 துறையை சேர்ந்த அதிகாரிகள் 20 பேர் ஆய்வு என்ற பெயரில் பணியாளர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அதனால், பொதுவினியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும். எங்களது 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 14 முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது என்றார்.
பேச்சுவார்த்தை: காலவரையற்ற ஸ்டிரைக்கை ஊழியர்கள் அறிவித்துள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்படு சூழல் உருவாகி உள்ளது.. எனினும், இது தொடர்பாக மாநில அரசு, இச்சங்கத்தினரை அழைத்து பேசுமா? அல்லது ஊழியர்கள் போராட்டத்தை கைவிடுவார்களா?? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications